IPL 2022 Format : புதிதாக 2 டீம், லீக் சுற்றில் நிகழப்போகும் அதிரடி மாற்றம் - முழு விவரம்

ஐபிஎல் 2021 கிரிக்கெட் தொடரை வெற்றிகரமாக ஐக்கிய அரபு நாடுகளில் இந்திய கிரிக்கெட் வாரியம் நடத்தி முடித்துள்ளது, இதில் எம்எஸ் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் 4-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்தது.

IPL Trophy
IPL Trophy (Photo by BCCI/IPL)


ஐபிஎல் 2022:

ஐபிஎல் 2022 ஆம் ஆண்டு மெகா ஏலம் நடைபெறும் எனவும் இந்த சீசனில் புதிதாக 2 அணிகள் சேர்க்கப்படும் எனவும் ஏற்கனவே பிசிசிஐ அறிவித்திருந்தது.

மெகா ஏலம் என்பது ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் அனைத்து அணிகளில் குறைந்தபட்சம் 2 அல்லது 3 வீரர்களை மட்டுமே தக்க தக்க வைத்துக் கொள்ள முடியும் எஞ்சிய வீரர்கள் அனைவரும் ஏலத்தில் விடப்படுவார்கள், இந்த ஏலம் இன்னும் சில மாதங்களில் நடைபெற உள்ளது.

புதிய 2 அணிகள் :

இந்நிலையில் ஐபிஎல் 2022 தொடரில் பங்கேற்க இருக்கும் புதிய 2 அணிகளுக்கான ஏலம் துபாயில் நேற்று நடைபெற்றது, பிசிசிஐ தலைவர் சௌரவ் கங்குலி செயலாளர் ஜெய் ஷா உள்ளிட்ட பிசிசிஐ முக்கிய நிர்வாகிகளுக்கு முன்னிலையில் இந்த ஏலம் நடை பெற்றது.

இந்த 2 அணிகளை வாங்குவதற்காக அதானி குரூப், கோட்டாக், ஹிந்துஸ்தான் உள்ளிட்ட 9 முக்கியமான முன்னணி வணிக நிறுவனங்கள் போட்டி போட்டன.

இறுதியில் சஞ்சீவ் கோனேகா தலைமையிலான ஆர்பிஎஸ்ஜி குரூப் "லக்னோ" ஐபிஎல் அணியை ரூபாய் 7090 கோடிகளுக்கு ஏலத்தில் வாங்கியது, இந்த நிறுவனம் ஏற்கனவே கடந்த 2016 ஆம் ஆண்டு ரைசிங் புனே சூப்பர் ஜெய்ன்ட்ஸ் என்ற பெயரில் ஐபிஎல் அணியை விலைக்கு வாங்கி 2016, 2017 ஆகிய ஐபிஎல் தொடர்களில் பங்கேற்றது.

  • எம்எஸ் தோனி தலைமையில் 2016ஆம் ஆண்டு பங்கேற்ற அந்த அணி 2017ம் ஆண்டு ஸ்டீவ் ஸ்மித் தலைமையில் இறுதிப் போட்டி வரை முன்னேறி வெறும் 1 ரன் வித்தியாசத்தில் மும்பை அணிக்கு எதிராக தோற்றது ரசிகர்களுக்கு நினைவிருக்கலாம்.
அதேபோல் "அஹமதாபாத்" ஐபிஎல் அணியை சிவிசி குரூப் நிறுவனம் 5625 ரூபாய் கோடிகளுக்கு வாங்கியது.

இந்த 2 அணிகளின் அதிகாரப்பூர்வ பெயர்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிரமாண்ட ஐபிஎல் 2022 :

இதை அடுத்து ஐபிஎல் 2022 தொடரில் சென்னை, மும்பை, கொல்கத்தா, டெல்லி, ராஜஸ்தான், ஹைதராபாத், பெங்களூரு, பஞ்சாப் உள்ளிட்ட ஏற்கனவே இருக்கும் 8 அணிகளுடன் புதிதாக லக்னோ மற்றும் அகமதாபாத் ஆகிய 2 அணிகளும் களமிறங்க உள்ளன.

மொத்தம் 10 அணிகள் விளையாட உள்ளதால் போட்டிகளும் அதிகமாக உள்ளது, ஆம் இந்த 2 அணிகள் அதிகமாகி உள்ளதால் அடுத்த வருடம் முதல் ஒரு சீசனில் லீக் சுற்று, பிளே ஆப் சுற்று உட்பட ஏற்கனவே நடைமுறையில் இருக்கும் 60 போட்டிகளுக்கு பதிலாக மொத்தம் 74 போட்டிகளுடன் பிரமாண்டமாக நடைபெற உள்ளது.

Photo : BCCI/IPL

லீக் சுற்றில் மாற்றம் :

இந்த 2 புதிய அணிகளின் வருகையால் 2022 ஐபிஎல் தொடரில் லீக் சுற்றில் முக்கியமான மாற்றங்கள் நிகழ உள்ளன.

  • முதலில் இந்த 10 அணிகளும் ஒரே பிரிவாக இல்லாமல் 2 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன.

ஏனெனில் தற்போது நடைமுறையிலிருக்கும் லீக் சுற்று போல ஒரே பிரிவாக நடத்தினால் 94 போட்டிகள் நடத்த வேண்டிய நிலைமை ஏற்படும்.

  • எனவே ஒவ்வொரு பிரிவுகளிலும் இடம்பெற்றுள்ள 10 அணிகளும் தலா 14 லீக் சுற்றுப் போட்டிகளில் பங்கேற்க உள்ளன.
  • ஒரு பிரிவில் இடம்பிடித்துள்ள ஒரு அணி அதே பிரிவில் இடம்பிடித்துள்ள மற்ற 4 அணிகளுடன் தலா 2 முறை மோத வேண்டும்.

  • அதில் ஒரு முறை சொந்த மைதானத்திலும் 2வது முறை எதிரணியின் மைதானத்திலும் விளையாட வேண்டும்.
  • அதேபோல் 2வது பிரிவில் இடம்படித்துள்ள மற்ற 4 அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும்.
  • மேலும் 2வது பிரிவில் மீதமிருக்கும் ஒரு அணியுடன் 2 முறை மோத வேண்டும்.

எடுத்துக்காட்டாக:

குரூப் ஏ பிரிவில் ஹைதெராபாத், டெல்லி, பஞ்சாப், மும்பை, லக்னோ இருப்பதாக வைத்துக்கொள்ளுங்கள்.

குரூப் பி பிரிவில் கொல்கத்தா, அஹமதாபாத், பெங்களூரு, ராஜஸ்தான், சென்னை ஆகிய 5 அணிகள் இருப்பதாக வைத்துக்கொள்ளுங்கள்.

இப்போது இந்த 2 பிரிவுகளிலும் கடைசி 2 இடங்களில் லக்னோ, சென்னை அணிகள் இருக்கிறது. இந்த நிலையில் லக்னோ அணி தாம் இடம் வகிக்கும் குரூப் ஏ பிரிவில் இடம் பிடித்துள்ள மற்ற 4 அணிகளுடன் தலா 2 முறையும் அதே போல் குரூப் பி பிரிவில் இடம் கடைசி இடத்தில் உள்ள சென்னை அணியுடன் 2 முறையும் பங்கேற்க உள்ளது.

மேலும் லக்னோ அணி குரூப் பி பிரிவில் இடம் வகிக்கும் கொல்கத்தா, அகமதாபாத், பெங்களூரு மற்றும் ராஜஸ்தான் ஆகிய அணிகளுடன் தலா 1 முறை மட்டுமே மோதும்.

இதேபோல் குரூப் பி பிரிவில் முதலிடம் வகிக்கும் கொல்கத்தா அணி அதே பிரிவில் இடம் வகிக்கும் மற்ற 4 அணிகளும் தலா 2 முறையும் குரூப் ஏ பிரிவில் முதலிடம் வகிக்கும் ஹைதராபாத் அணியுடன் 2 முறையும் மோதும். 

அதேசமயம் குரூப் ஏ பிரிவில் இடம் வகிக்கும் இதர 4 அணிகளுடன் தலா 1 முறை மட்டுமே மோதும்.

இந்த வகையில் நீங்களே கணக்கிட்டால் ஒரு அணிக்கு லீக் சுற்றில் மொத்தம் 14 போட்டிகள் சரியாக விளையாட வாய்ப்பு கிடைக்கும்.

புள்ளிப்பட்டியல் :

லீக் சுற்றில் ஒவ்வொரு அணியும் பெரும் வெற்றிக்கு வழக்கம்போல தலா 2 புள்ளிகள் வழங்கப்படும், தோல்விக்கு புள்ளிகள் கிடையாது ஒரு வேளை போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டால் இரு அணிகளுக்கும் தலா 1 புள்ளி வழங்கப்படும்.

10 அணிகளும் 2 பிரிவுகளாக பிடிக்கப்பட்டாலும் கூட புள்ளி பட்டியல் என்பது ஒன்றுதான், அதாவது லீக் சுற்றின் முடிவில் அதிக புள்ளிகளைப் பெறும் முதல் 4 அணிகள் புள்ளி பட்டியலில் முதல் 4 இடங்களை பிடித்து சுற்றுக்கு முன்னேறும்.

பிளே ஆப் சுற்று:

குவாலிபயர் 1: பிளே ஆப் சுற்றில் வழக்கம்போல புள்ளி பட்டியலில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் குவாலிபயர் 1 போட்டியில் பங்கேற்க உள்ளன, இப்போட்டியில் வெற்றி பெறும் அணி நேரடியக இறுதிப்போட்டிக்கு முன்னேறும்.

எலிமினேட்டர் : புள்ளிப் பட்டியலில்  3 மற்றும் 4வது இடங்களை பிடிக்கும் அணிகள் எலிமினேட்டர் போட்டியில் பங்கேற்க உள்ளன, இந்த போட்டியில் தோல்வி அடையும் அணி தொடரில் இருந்து வெளியேறும்.

குவாலிபயர் 2 : குவாலிபயர் 1 போட்டியில் தோல்வி அடையும் அணியும் எலிமினேட்டர் போட்டியில் வெற்றி அடையும் அணியும் குவாலிபயர் 2 போட்டியில் பலப்பரீட்சை நடத்த உள்ளன. இதில் வெற்றி பெறும் அணி இறுதிப்போட்டிக்கு 2வது அணியாக தகுதி பெறும்.

Previous Post Next Post

Your Reaction