ஐபிஎல் 2021 தொடரின் சாம்பியன் பட்டத்தை வென்ற எம்எஸ் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் ஐபிஎல் வரலாற்றில் 4வது முறையாக சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்துள்ளது.
Photo By BCCI/IPL |
முன்னதாக துபாயில் நேற்று நடைபெற்ற மாபெரும் இறுதிப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 192/3 ரன்கள் குவித்தது.
டு பிளேஸிஸ் அபாரம்:
அதிகபட்சமாக தொடக்க வீரர் பப் டு பிளசிஸ் 86 ரன்கள் வெளுத்து வாங்கினார், கொல்கத்தா சார்பில் சுனில் நரைன் 2 விக்கெட்டுகளை சாய்த்தார். பின்னர் 193 என்ற இலக்கை துரத்திய கொல்கத்தா தொடக்க வீரர் வெங்கடேச ஐயர் 50 ரன்கள் மற்றும் கில் 51 ரன்கள் ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் 91/0 என நல்ல தொடக்கத்தை பெற்றது.
சென்னை மாஸ் பவுலிங்:
சரி ஐபிஎல் 2021 தொடரில் வழங்கப்பட்ட ஒட்டுமொத்த பரிசுத் தொகைகள் மற்றும் விருதுகளின் பட்டியல் பற்றி பார்ப்போம் வாங்க:
1. வின்னர்: எம்எஸ் தோனி தலைமையில் 4வது முறையாக கோப்பையை வென்ற சென்னை அணிக்கு ஐபிஎல் 2021 வெற்றி கோப்பை மற்றும் பரிசுத் தொகையாக 20 கோடி ரூபாய் வழங்கப்பட்டது. இந்த தொகை அணியில் இருக்கும் அனைவருக்கும் பகிர்ந்து அளிக்கப்படும்.
2. ரன்னர் : முதல் பகுதியில் சொதப்பினாலும் 2வது பகுதியில் அபாரமாக செயல்பட்டு இறுதிப்போட்டி வரை முன்னேறி தோல்வி அடைந்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு 12.50 கோடி ரூபாய் பரிசுத் தொகையாக வழங்கப்பட்டது.
3. ஆரஞ்சு தொப்பி : இந்த சீசனில் 635 ரன்கள் விளாசி அதிக ரன்கள் குவித்த வீரராக சாதனை படைத்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை சேர்ந்த ருத்ராஜ் கைக்வாட் ஆரஞ்சு தொப்பியை வென்றார்.
- அவருக்கு ஆரஞ்சு தொப்பி மற்றும் வெற்றி கோப்பையுடன் ரூபாய் 10 லட்சம் பரிசுத் தொகையாக வழங்கப்பட்டது.
17 போட்டிகளில் 4 அரைசதங்கள் மற்றும் 1 சதம் உட்பட 635 ரன்களை குவித்து அவர் இந்த பரிசை பெற்றுள்ளார்.
4. ஊதா தொப்பி : அதேபோல் இந்த சீசனில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய பந்துவீச்சாளர்களுக்கு வழங்கப்படும் ஊதா நிற தொப்பியை பெங்களூர் அணியை சேர்ந்த ஹர்ஷல் படேல் வென்று சாதனை படைத்தார்.
- அவர் 15 போட்டிகளில் ஒரு ஹாட்ரிக் மற்றும் ஒரு 5 விக்கெட்டுகள் உட்பட 32 விக்கெட்டுகள் சாய்த்து ஊதா நிற தொப்பி மற்றும் வெற்றி கோப்பையுடன் ரூபாய் 10 லட்சம் பரிசுத் தொகையை வென்றார்.
5. வளரும் வீரர் : ஐபிஎல் 2021 தொடரில் வளர்ந்துவரும் வீரர் விருதை சென்னை அணியை சேர்ந்த ருத்ராஜ் கைக்வாட் வென்று அசத்தினார்.
Photo By BCCI/IPL |
- அவர் இந்த வருடம் 635 ரன்கள் குவித்து இந்த விருதை வென்றுள்ளார், இந்த வருடம் சென்னை சூப்பர் கிங்ஸ் அடித்த ஒட்டுமொத்த ரன்களில் ருதுராஜ் மட்டும் தனி ஒருவனாக 30% ரன்களை அடித்துள்ளார்.
இதர விருதுகள்:
சிறந்த கேட்ச் : இந்த வருடத்தின் சிறந்த கேட்சை பிடித்த வீரராக கொல்கத்தா அணிக்கு எதிராக சுனில் நரைன் கொடுத்த கேட்சை அபாரமாக பிடித்த பஞ்சாப் கிங்ஸ் அணியைச் சேர்ந்த இளம் வீரர் ரவி பிஷ்னோய் தேர்வு செய்யப்பட்டார், அவருக்குப் ரூபாய் 10 லட்சம் பரிசு தொகை வழங்கப்பட்டது.
சூப்பர் ஸ்ட்ரைக்கர் : இந்த சீசனில் அதிக ஸ்ட்ரைக் ரேட் விகிதத்தில் ரன்களை குவித்த டெல்லி அணியை சேர்ந்த சிம்ரோன் ஹெட்மையர் இந்த வருடத்தின் சூப்பர் ஸ்ட்ரைக்கர் விருதை வென்றார்.
- இந்த சீசனில் 168.00 என்ற அபாரமான ஸ்ட்ரைக் ரேட் விகிதத்தில் ரன்களை விளாசிய அவருக்கு ரூபாய் 10 லட்சம் பரிசுத் தொகை மற்றும் வெற்றி கோப்பை கொடுக்கப்பட்டது.
அதிக சிக்சர் : ஐபிஎல் 2021 தொடரில் மொத்தம் 30 சிக்ஸர்களை பறக்கவிட்டு அதிக சிக்சர்களை அடித்து வீரராக சாதனை படைத்த பஞ்சாப் கேப்டன் கேஎல் ராகுல் "லெட்ஸ் க்ரக் இட்" விருதையும் அதற்காக ரூபாய் 10 லட்சம் பரிசுத் தொகையையும் வென்றார்.
ட்ரீம் 11 கேம் சேஞ்சர் : இந்த வருடம் ட்ரீம் லெவன் கேம் சேஞ்சர் விருதை 1081 புள்ளிகளுடன் பெங்களூரு அணியை சேர்ந்த ஹர்ஷல் பட்டேல் வென்று அசத்தினார், அவருக்கு ரூபாய் 10 லட்சம் பரிசுத் தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.
கேம் சேஞ்சர் : இந்த சீசனில் விளையாட்டை மாற்றிய கேம் சேஞ்சர் வீரருக்கான விருதை கொல்கத்தா அணிக்காக விளையாடிய இளம் வெங்கடேஷ் ஐயர் வென்று அசத்தினார், அவருக்கு 10 லட்சம் ரூபாய் மற்றும் அதற்கான வெற்றிக் கோப்பை பரிசு கொடுக்கப்பட்டது.
தொடர் நாயகன் : இந்த வருடத்திற்கான அதிக மதிப்புள்ள வீரர் அதாவது தொடர் நாயகன் விருதை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை சேர்ந்த ஹர்ஷல் படேல் 264 புள்ளிகளை பெற்று முதலிடம் பிடித்து வென்றார்.
Photo By BCCI/IPL |
- அவருக்கு அதற்கான வெற்றிக் கோப்பை மற்றும் ரூபாய் 10 லட்சம் பரிசுத் தொகையாக அறிவிக்கப்பட்டது.
ஆட்டநாயகன் : அதேபோல் நேற்றைய இறுதி போட்டியில் 86 ரன்கள் விளாசி சென்னையின் வெற்றிக்கு வித்திட்ட பஃப் டு பிளசிஸ் இறுதிப் போட்டியின் ஆட்ட நாயகன் விருதை வென்று அசத்தினார், அவருக்கும் வெற்றிக் கோப்பை மற்றும் பரிசு தொகை 10 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது.
பேர் பிளே அவார்ட் : இந்த வருடத்திற்கான பேர் பிளே அவார்டு அதாவது அறத்துடன் விளையாடிய அணியாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தேர்வு செய்யப்பட்டு பரிசு தொகை வழங்கப்பட்டது.
Search Tags : IPL 2021 Prize Money and List Of Awards, 2021 IPL Prize Money and List Of Awards Winners, IPL 2021 Purple Cap and Orange Cap Winners.