ஐபிஎல் 2021 கிரிக்கெட் தொடரின் லீக் சுற்றுப் போட்டிகள் மிகவும் விறுவிறுப்பான இறுதி கட்டத்தை எட்டியுள்ளன.
Rohit Sharma | Eoin Morgan (Photo : BCCI/IPL) |
இதில் இதுவரை நடைபெற்று முடிந்துள்ள 52 லீக் சுற்றுப் போட்டிகளின் முடிவில் சென்னை சூப்பர் கிங்ஸ் டெல்லி கேப்பிடல் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ஆகிய அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு முதல் 3 அணிகளாக தகுதி பெற்றுள்ளன.
வெளியேறும் நிலையில் பஞ்சாப், ராஜஸ்தான்:
தற்போதைய நிலைமையில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ஏற்கனவே இந்த வருடத்தின் லீக் சுற்றோடு முதல் அணியாக வெளியேறிவிட்டது, இந்த வேளையில் நேற்று நடைபெற்ற முக்கியமான 51வது லீக் போட்டியில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணி ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்கொண்டது.
கட்டாயம் வென்றாக வேண்டும் என்ற நிலையில் இந்தப் போட்டியில் முதலில் பந்து வீசிய மும்பை அபாரமாக பந்துவீசி ராஜஸ்தானை 20 ஓவர்களில் வெறும் 90/9 ரன்களுக்குள் சுருட்டி பின்பு 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் வாயிலாக 6வது வெற்றியை பதிவு செய்த மும்பை புள்ளிப் பட்டியலில் 5வது இடம் பிடித்துள்ளது.
- நேற்றைய போட்டியில் ஒருவேளை ராஜஸ்தான் வெற்றி பெற்றிருந்தால் மும்பை மற்றும் பஞ்சாப் அணிகள் அதிகாரப்பூர்வமாக லீக் சுற்றுடன் வெளியேறி இருக்கும்.
ஆனால் இந்த போட்டியில் மும்பை வெற்றி பெற்றதன் காரணமாக பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் ஆகிய அணிகள் லீக் சுற்று விட்டு வெளியேறுவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது.
ஏனெனில் அந்த 2 அணிகளுக்கும் இன்னும் 1 போட்டி எஞ்சியுள்ள நிலையில் வெறும் 10 புள்ளிகள் மட்டுமே பெற்று புள்ளி பட்டியலில் 6, 7 ஆகிய இடங்களில் உள்ளன.
ஒருவேளை கடைசி லீக் போட்டியில் வெற்றி பெற்றால் கூட அந்த அணியால் 4வது இடத்தை பிடிப்பது என்பது சாத்தியமற்றதாகும். இருப்பினும்
பஞ்சாப் ப்ளே ஆப் சுற்றுக்கு முன்னேற:
முதலில் சென்னைக்கு எதிரான தங்களின் கடைசி லீக் போட்டியில் வெற்றி பெற வேண்டும்.
- அத்துடன் ஹைதராபாத் அணிக்கு எதிரான லீக் போட்டியில் மும்பை தோற்கவேண்டும், ராஜஸ்தானுக்கு எதிரான லீக் போட்டியில் கொல்கத்தா தோற்க வேண்டும்.
மேற்கூறிய அனைத்தும் நடைபெற்றாலும் கூட கொல்கத்தாவை விட மிகக் குறைவான ரன்ரேட் பெற்றுள்ள காரணத்தால் பஞ்சாப் பிளே ஆப் சுற்றுக்கு செல்வது என்பது 0.1% எனக் கூறலாம்.
ராஜஸ்தான் பிளே ஆப் சுற்றுக்கு செல்ல:
தனது கடைசி லீக் போட்டியில் கொல்கத்தாவுக்கு எதிராக ராஜஸ்தான் முதலில் வெற்றி பெற வேண்டும்.
அத்துடன் மும்பையை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் வீழ்த்த வேண்டும், இந்த இரண்டும் நடந்தால் கூட பஞ்சாப்பை விட மிகக் குறைவான ரன் ரட் இருக்கும் காரணத்தால் ராஜஸ்தானும் பிளே ஆப் சுற்றுக்கு செல்லும் வாய்ப்பு 0.1% என கூறலாம்.
நடைமுறை வாய்ப்பு:
தற்போதைய நிலைமையில் தலா 12 புள்ளி யுடன் புள்ளி பட்டியலில் 4 மற்றும் 5வது இடங்களில் உள்ள கொல்கத்தா மற்றும் மும்பை அணிகள் அதுதான் நான்காவது இடத்தை பிடிக்கும் அதிகமான வாய்ப்புகள் நடைமுறைப்படி உள்ளது.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ்:
கொல்கத்தா பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற தனது கடைசி போட்டியில் ராஜஸ்தானை வீழ்த்த வேண்டும்.
- அத்துடன் மும்பை ஹைதராபாத்திடம் தோல்வி பெற வேண்டும் இப்படி நடந்தால் எந்தவித பிரச்சனையுமின்றி கொல்கத்தா எளிதாக பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறலாம்.
ஒருவேளை ராஜஸ்தானுக்கு எதிரான கடைசி போட்டியில் வெற்றி பெறாவிட்டாலும் மும்பையை ஹைதராபாத் தோற்கடிக்கும் பட்சத்தில் கொல்கத்தா 4வது இடத்தை பிடிக்கும்.
Photo By BCCI/IPL |
- ஏனெனில் 4வது இடத்திற்கு போட்டி போடும் 4 அணிகளில் கொல்கத்தாவுக்கு தான் சிறந்த நெட் ரன் ரேட் உள்ளது.
அதேபோல் ஒருவேளை ஹைதராபாத்தை மும்பை வீழ்த்தும் பட்சத்தில் தனது கடைசி போட்டியில் கொல்கத்தா கண்டிப்பாக வெற்றி பெற வேண்டும்.
மும்பை இந்தியன்ஸ்:
நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் தற்போது புள்ளி பட்டியலில் 5 வது இடத்தில் உள்ளது என்றாலும் 4வது இடத்திற்கு போட்டி போடும் மற்றொரு அணியான கொல்கத்தாவை விட மிக மிக குறைந்த ரன்ரேட் கொண்டுள்ளது.
Photo By BCCI/IPL |
- எனவே மும்பை இந்தியன்ஸ் பிளே ஆப் சுற்றுக்கு செல்ல வேண்டுமெனில் தனது கடைசி போட்டியில் ஹைதராபாத்தை வீழ்த்த வேண்டும், அத்துடன் கொல்கத்தாவை ராஜஸ்தான் தோற்கடிக்க வேண்டும்.
மேலும் கடைசி போட்டியில் ஹைதராபாத்தை மும்பை தோற்கடித்தாலும் கூட ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா வெற்றி பெற்றால் ரன் ரேட் அடிப்படையில் மும்பையை விட கொல்கத்தாவுக்கு தான் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.