RCB யில் விழைந்த மாணிக்கம் ஹர்ஷல் படேல் - ப்ராவோவின் வரலாற்று சாதனை சமன்

ஐபிஎல் 2021 கிரிக்கெட் தொடரில் விராட்கோலி தலைமயிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி லீக் சுற்றில் சிறப்பாக செயல்பட்டு ப்ளே ஆப் சுற்றுக்கு முன்னேறியது, பின்னர் நடைபெற்ற பிளே ஆப் சுற்றில் எலிமினேட்டர் போட்டியில் கொல்கத்தாவிடம் தோற்று மீண்டும் தனது முதல் ஐபிஎல் கோப்பையை வெல்ல முடியாமல் ஏமாற்றத்துடன் வெளியேறியது.

Harshal Patel
Harshal Patel with Virat Kohli (Photo : BCCI/IPL)


முடிந்த விராட் கோலி சகாப்தம்:

அதேபோல் இந்த வருடம் கடைசி முறையாக பெங்களூர் அணிக்கு கேப்டன்ஷிப் செய்த விராட் கோலி தோல்வியின் காரணமாக கடைசி வரை கேப்டனாக ஒரு ஐபிஎல் கோப்பையை வெல்ல முடியாமலேயே விடைபெற்றார்.

கடந்த 2013 முதல் பெங்களூர் அணிக்காக கேப்டன்ஷிப் செய்து வரும் அவர் எவ்வளவோ போராடியும் கடைசிவரை ஐபிஎல் என்ற இலக்கை அவரால் தொடவே முடியவில்லை.

பவுலிங் அபாரம்:

பொதுவாகவே ஐபிஎல் கிரிக்கெட்டில் பெங்களூரு அணியின் விராட் கோலி, ஏபி டிவிலியர்ஸ், கிறிஸ் கெயில், கிளன் மேக்ஸ்வெல் என அதிரடி வீரர்களால் பேட்டிங் எப்போதுமே வலுவாக இருக்கும் ஆனால் படு மோசமான பவுலர்கள் காரணமாக அவர்கள் அடிக்கும் அத்தனை ரன்களும் இறுதியில் வீணாகி தோல்வி அடைந்து விடுவார்கள்.

ஆனால் இந்த முறை உண்மையாகவே பந்துவீச்சு துறையில் பெங்களூரு அசத்தியது என்று கூறலாம், இதற்கு முக்கிய காரணம் அந்த அணியில் ஹர்சல் படேல், முகமது சிராஜ் மற்றும் சஹால் என மூவரும் அபாரமாக பந்துவீசி லீக் சுற்றில் பெங்களூருவின் வெற்றிக்கு பலமுறை வித்திட்டார்கள்.

மாணிக்கம் ஹர்ஷல் படேல்:

குறிப்பாக அந்த அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஹர்சல் படேல் இந்த வருடம் பங்கேற்ற 15 போட்டிகளில் 32 விக்கெட்டுகளை சாய்த்து அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பந்துவீச்சாளர்களுக்கு வழங்கப்படும் ஊதா நிற தொப்பியை வென்று சாதனை படைத்தார்.

  • வரலாற்றில் இதுவரை நடைபெற்ற ஐபிஎல் தொடர்களில் ஹர்ஷல் படேல் தவிர பெங்களூர் அணிக்காக விளையாடிய ஒரு பந்து வீச்சாளர்கள் கூட இந்த ஊதா நிற தொப்பையை வென்றதே கிடையாது.

ப்ராவோ சாதனை சமன்:

அத்துடன் ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு குறிப்பிட்ட சீசனில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய பவுலர் என்ற டுவைன் பிராவோவின் வரலாற்று ஐபிஎல் சாதனையை ஹர்ஷல் படேல் சமன் செய்தார்.

ஐபிஎல் கிரிக்கெட்டில் அதிக பட்சமாக ஒரு சீசனில் டுவைன் பிராவோ மற்றும் ஹர்ஷல் படேல் இருவருமே தலா 32 விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.

  • டுவைன் பிராவோ - 32 விக்கெட்டுகள் (2013).
  • ஹர்சல் பட்டேல் - 32 விக்கெட்டுகள் (2021).

இத்தனைக்கும் இவர் இதற்கு முன்பு இந்தியாவிற்காக விளையாடாத வீரராக உள்ளார்.

Photo By BCCI/IPL


பும்ரா சாதனை முறியடிப்பு:

இதன் வாயிலாக ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு குறிப்பிட்ட சீசனில் அதிக விக்கெட்டுகள் எடுத்த இந்தியாவிற்காக விளையாடாத வீரர் என்ற நட்சத்திரம் ஜஸ்பிரித் பும்ரா வின் சாதனையை உடைத்து புதிய சாதனையையும் அவர் படைத்துள்ளார்.

  • ஹர்ஷல் படேல் - 32 விக்கெட்கள் (2021).
  • ஜஸ்பிரித் பும்ரா - 26 விக்கெட்கள் (2013).

இந்த 2021 தொடரில் அதிக விக்கெட்டுகள் எடுத்த பந்துவீச்சாளர்களில் அதிக விக்கெட்டுகள் எடுத்த பந்துவீச்சாளர்கள்:

  • ஹர்ஷல் படேல் - 32 விக்கெட்கள்.
  • அவேஷ் கான் - 24 விக்கெட்கள்.

முதலிடத்தில் இருக்கும் ஹர்ஷல் படேலுக்கும் 2வது இடத்திலிருக்கும் அவேஷ் கானுக்கும் இடைப்பட்ட வித்தியாசம் 8 விக்கெட்டுகள் என்பது படேலின் திறமையை காட்டுகிறது.

மும்பையை காலி செய்த ஹர்ஷல் படேல்:

இது மட்டுமல்லாமல் 5 முறை ஐபிஎல் கோப்பையை வென்று வரலாற்றிலேயே மிகவும் வெற்றிகரமான அணியாக விளங்கும் வலுவான மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக ஹாட்ரிக் விக்கெட்டுகளை எடுத்த முதல் பெங்களூரு பவுலர் மற்றும் வரலாற்றில் மும்பைக்கு எதிராக ஒரு போட்டியில் 5 விக்கெட்டுகள் எடுத்த முதல் பவுலர் என்ற 2 மெகா சாதனைகளையும் அவர் இந்த ஆண்டு படைத்தார்.

  • இதன் காரணமாக வரலாற்றிலேயே முதல் முறையாக ஒரே சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணியை 2 லீக் போட்டிகளிலும் பெங்களூரை வீழ்த்தி அசத்தியது.

இதிலிருந்து வரலாற்றிலேயே முதல் முறையாக பெங்களூர் அணியில் இருந்து ஒரு மாணிக்கமான பந்துவீச்சாளராக ஹர்சல் படேல் உருவாகியுள்ளார் என்று எவ்வித தயக்கமுமின்றி கூறலாம்.

கோப்பையை கையில் ஏந்தாமல் போனாலும் இது போன்ற ஒரு பவுலர் பெங்களூர் அணிக்காக விளையாடியதை நினைத்து கண்டிப்பாக பெங்களூரு ரசிகர்கள் பெருமைப்படலாம்.

Previous Post Next Post

Your Reaction