T20 World Cup 2021: தடுமாறும் ஹர்டிக் பாண்டியாவுக்கு பதில் 3 மாற்று வீரர்கள்

ஐசிசி 20 ஓவர் உலக கோப்பை 7வது முறையாக வரும் அக்டோபர் 17ஆம் தேதி முதல் ஐக்கிய அரபு நாடுகளில் நடைபெற உள்ளது.

Hardik Pandya (Photo : Mumbai Indians)


இந்த தொடரில் பங்கேற்கும் விராட் கோலி தலைமையிலான 15 பேர் கொண்ட இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.

ஹர்டிக் பாண்டியா:

அந்த அணியில் இந்தியாவின் ஆல்ரவுண்டராகவும் பினிசராகவும் நட்சத்திர வீரர் ஹர்திக் பாண்டியா தேர்வு செய்யப்பட்டுள்ளார், அதிரடியாக பேட்டிங் செய்யும் திறமை கொண்ட அவர் பந்து வீசும் வல்லமையும் படைத்தவராக இருக்கிறார்.

இதனால் 3வது வேகபந்து வீச்சாளராகவும் பேட்டிங் வரிசையில் 6 அல்லது 7வது இடத்தில் களம் இறங்கி பினிஷிங் செய்து இந்தியாவிற்கு வெற்றியை பெற்றுத் தருவார் என்ற நோக்கத்திலும் இவரை அணியில் இந்திய தேர்வு குழுவினர் தேர்வு செய்துள்ளார்கள்.

பந்துவீசாத பாண்டியா:

இருப்பினும் காயம் காரணமாக இங்கிலாந்து தொடர் உட்பட சமீப காலமாக இந்திய அணியில் விலகி இருந்த அவர் தற்போது காயத்திலிருந்து குணமடைந்தது ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.

குறிப்பாக துபாயில் நடைபெற்று வரும் ஐபில் 2021 தொடரின் 2ம் பாகத்தில் அவர் இதுவரை 2 போட்டிகளில் விளையாடியுள்ளார் ஆனாலும் அந்த 2 போட்டிகளிலும் அவர் பந்து வீசவில்லை என்பது இந்திய ரசிகர்களுக்கு கவலை அளிக்கும் ஒன்றாக இருக்கிறது.

இப்படிப்பட்ட வேளையில் டி20 உலக கோப்பையில் பந்து வீச வேண்டும் என்பதற்காகவே ஐபிஎல் தொடரில் பாண்டியாவை பந்துவீச வற்புறுத்தவில்லை என மும்பை இந்தியன்ஸ் அணியின் பயிற்சியாளர் மகிளா ஜெயவர்தனே தெரிவித்துள்ளார்.

மாற்று வீரர்கள்:

Photo By BCCI

இந்த நிலையில் ஹர்திக் பாண்டியா பேட்டிங் மட்டும் செய்வார் என்ற நிலை ஏற்பட்டால் டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் அவருக்கு இடம் சந்தேகமாகவே அமையும் என பிசிசிஐ நினைக்கிறது. ஒருவேளை ஹர்திக் பாண்டியாவை மாற்ற வேண்டும் என பிசிசிஐ நினைத்தால் அதற்கு தகுதியான 3 மாற்று வீரர்கள் இதோ:

1. ஷார்துல் தாகூர்:

கடந்த சில வருடங்களாக ஷர்துல் தாகூர் நல்ல ஆல்-ரவுண்டராக தன்னைத்தானே மெருகேற்றி வருகிறார் குறிப்பாக ஆஸ்திரேலியாவின் காபா டெஸ்டில் அசத்திய இவர் சமீபத்தில் இங்கிலாந்துக்கு எதிராக நடந்த டெஸ்ட் தொடரில் 2 போட்டிகளில் பங்கேற்று 7 விக்கெட்டுகள் எடுத்து அசத்தினார்.

மேலும் ஓவல் டெஸ்ட் போட்டியில் 2 இன்னிங்ஸ்களிலும் அரைசதம் அடித்து இந்தியாவின் வெற்றிக்கு வித்திட்ட அவர் அந்த தொடரில் 117 ரன்கள் எடுத்தார். தற்போது ஐபிஎல் தொடரிலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காகவும் சிறப்பாக விளையாடி வரும் இவர் இதுவரை இந்தியாவுக்காக 21 டி20 போட்டிகளில் விளையாடிய அனுபவம் கொண்டவர்.

ஏற்கனவே 2021 டி20 உலகக் கோப்பை இந்திய அணியின் காத்திருப்போர் பட்டியலில் முதல் வீரராக தாகூர் இருக்கிறார், எனவே ஹர்திக் பாண்டியாவை மாற்ற வேண்டும் என நினைத்தால் தாகூரை முதல் ஆளாக அணியில் சேர்க்கலாம்.

2. தீபக் சஹர்:

டி20 உலக கோப்பை இந்திய அணியில் தீபக் சாஹர் எடுக்கப்படாதது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது ஏனெனில் பவர்ப்ளே ஓவர்களில் விக்கெட்டுகளை எடுக்கக்கூடிய ஸ்பெஷலிஸ்ட் பவுலராக தீபக் சஹர் வலம் வருகிறார்.

அத்துடன் பேட்டிங்கிலும் 7, 8வது இடத்தில் களம் இறங்கி ரன்களை அதிரடியாக அடிக்கும் திறமயையும் பெற்றுள்ளார்

குறிப்பாக சமீபத்தில் கொழும்புவில் நடைபெற்ற இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இந்தியா 193/6 எனத் தடுமாறும் போது கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்து 69* ரன்கள் குவித்து இந்தியாவின் வெற்றிக்கு வித்திட்டது நம்மால் மறக்க முடியாது.

3. ஹர்சல் படேல்:

ஐபிஎல் 2021 தொடரில் இதுவரை அதிகபட்சமாக 26* விக்கெட்டுகள் எடுத்து ஊதா நிற தொப்பியை பெங்களூருவைச் சேர்ந்த ஹர்சல் படேல் தன்வசம் வைத்துள்ளார்.

ஐபிஎல் தொடரில் மற்ற இந்திய பவுலர்களை காட்டிலும் இவர் அற்புதமாக செயல்பட்டு வருகிறார் குறிப்பாக மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக கடந்த சில தினங்களுக்கு முன்பு நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ஹாட்ரிக் விக்கெட்டுகளை எடுத்து சாதனை படைத்தார்.

ஹர்டிக் பாண்டியா அளவுக்கு இல்லை என்றாலும் கூட பேட்டிங்கில் கணிசமான ரன்களை அடிக்கக்கூடிய திறமையையும் கொண்டுள்ளார்.


Previous Post Next Post

Your Reaction