ஐபிஎல் 2021 கிரிக்கெட் தொடரில் நேற்று இரவு துபாயில் நடைபெற்ற குவாலிபயர் 1 போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய சென்னை சூப்பர் கிங்ஸ் அபார வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முதல் அணியாக முன்னேறி அசத்தியது.
Photo By BCCI/IPL |
முன்னதாக இப்போட்டியில் முதலில் பேட் செய்த டெல்லி அணிக்கு பிரிதிவி ஷா 60 ரன்களும் கேப்டன் ரிஷப் பண்ட் 51* ரன்களும், ஹெட்மையர் 37 ரன்களும் எடுக்க 20 ஓவர்களில் அந்த அணி 172/5 ரன்கள் எடுத்தது.
ராபின் உத்தப்பா அபாரம்:
பின் 173 என்ற இலக்கை துரத்திய சென்னைக்கு துவக்க வீரர் டுப்லஸ்ஸிஸ் வெறும் 1 ரன்னில் அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்தார், அடுத்து களமிறங்கிய அனுபவ வீரர் ராபின் உத்தப்பா இளம் ருத்ராஜ உடன் இணைந்து அதிரடியாக டெல்லி அணியின் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடிக்க தொடங்கினார்.
ருதுராஜ் கைக்வாட்:
தொடர்ந்து அபாரமாக விளையாடிய இவர் 44 பந்துகளில் 63 ரன்கள் எடுத்து 2-ஆவது விக்கெட்டுக்கு 110 ரன்கள் குவித்து அவுட் ஆனார், அடுத்து எதிர்பாராத வண்ணம் வந்த ஷர்டுல் தாகூர் டக் அவுட் ஆக அம்பத்தி ராயுடு 1 ரன்னில் ரன் அவுட் ஆனதால் போட்டியில் பரபரப்பு ஏற்பட்டது.
மறுபுறம் சிறப்பாக விளையாடிய ருத்ராஜ் 50 பந்துகளில் 70 ரன்களும் மொய்ன் அலி 16 ரன்களில் நடையை கட்ட கடைசி நேரத்தில் 13 பந்துகளில் 24 ரன்கள் தேவைப்பட்ட போது களமிறங்கிய தோனி வெறும் 6 பந்துகளில் 3 பவுண்டரி ஒரு சிக்சர் உட்பட 18 ரன்களுடன் போட்டியை பினிஷிங் செய்து சென்னையை வெற்றிபெற வைத்தார்.
தல பினிஷிங்:
நேற்றைய போட்டியில் இறுதி நேரத்தில் நல்ல பார்மில் இருக்கும் ஜடேஜா களமிறங்குவார் என எதிர் பார்த்த போது பார்ம் இன்றி தவித்து வரும் 40 வயதான எம்எஸ் தோனி களம் இறங்கி சென்னைக்கு இறுதியில் வெற்றியைத் தேடிக் கொடுத்தது தோனி மற்றும் சென்னை ரசிகர்களுக்கு மிகவும் உணர்ச்சிபூர்வமான மகிழ்ச்சியை கொடுத்தது.
Photo By BCCI/IPL |
சரி இந்த போட்டியில் நிகழ்ந்த சில முக்கியமான சாதனைகள் பற்றி பார்ப்போம்:
1. நேற்றைய வெற்றியால் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய சென்னை சூப்பர் கிங்ஸ் ஐபிஎல் கிரிக்கெட்டில் இதுவரை பங்கேற்ற 12 தொடர்களில் 9 முறையாக தகுதி பெற்றுள்ளது, இது ஐபிஎல் தொடரில் விளையாடும் மற்ற அணிகளை காட்டிலும் மிகவும் அதிகமாகும்.
2. தனது 24 வயது 6 வது நாளில் டெல்லிக்கு கேப்டன்ஷிப் செய்த ரிஷப் பண்ட் மிகவும் இளம் வயதில் ஒரு பிளே ஆப் போட்டிக்கு கேப்டன்ஷிப் செய்த வீரர் என்ற பெருமை பெற்றார்.
3. அதேபோல் நேற்றைய போட்டியில் 51* ரன்கள் அடித்த அவர் பிளே ஆப் சுற்றில் மிக இளம் வயதில் அரைசதம் அடித்த கேப்டன் என்ற பெருமையையும் பெற்றார்.
- ரிஷப் பண்ட் - 24 வருடம் 6 நாட்கள்.
- ஷ்ரேயஸ் ஐயர் - 25 வருடம் 340 நாட்கள்.
4. இந்த போட்டியில் 1 விக்கெட் எடுத்த டுவைன் பிராவோ டி20 கிரிக்கெட் வரலாற்றில் 550 விக்கெட்டுகளை எடுத்த முதல் பந்து வீச்சாளர் என்ற சரித்திரத்தை படைத்தார்.
- இவர் இதுவரை 506 டி20 போட்டிகளில் 550 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார்.
5. அதேபோல் ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய பந்துவீச்சாளர் என்ற பெருமையை அமித் மிஸ்ரா உடன் பகிர்ந்து கொண்டுள்ளார்.
- அமித் மிஸ்ரா மற்றும் டுவைன் பிராவோ இருவருமே இதுவரை தலா 166 விக்கெட்டுகள் எடுத்துள்ளனர்.
6. மேலும் நேற்று தனது 150வது ஐபிஎல் போட்டியில் களமிறங்கிய பிராவோ ஐபிஎல் கிரிக்கெட்டில் 150 போட்டிகளில் விளையாடிய 2வது வெஸ்ட் இண்டீஸ் வீரர் என்ற பெருமையையும் பெற்றார்.
- கிரண் பொல்லார்ட் - 178 போட்டிகள்.
- ட்வயன் ப்ராவோ - 150 போட்டிகள்.
7. நேற்றைய போட்டியில் 70 ரன்கள் குவித்து சென்னையின் வெற்றிக்கு வித்திட்டு ஆட்டநாயகன் விருது வென்ற ருத்ராஜ் கெய்க்வாட் 2021 ஐபிஎல் தொடரில் 600 ரன்களை கடந்தார்.
- இதன் வாயிலாக ஐபிஎல் கிரிக்கெட்டில் ஒரு சீசனில் 600 ரன்களுக்கும் மேல் அடித்த 3வது சென்னை வீரர் என்ற பெருமையை மைக்கல் ஹசி, அம்பத்தி ராயுடு ஆகியோருக்குப் பின் பெற்றார்.
Photo By BCCI/IPL |
8. சென்னைக்காக ஒரு சீசனில் அதிக ரன்கள் குவித்த 2வது பேட்டர் என்ற சாதனையையும் ருத்ராஜ் படைத்தார்.
- மைக்கேல் ஹசி - 733 ரன்கள் (2013).
- ருதுராஜ் கைக்கவாட் - 603* ரன்கள் (2021*).
- அம்பத்தி ராயுடு - 602 ரன்கள் (2018).
9. இது மட்டுமல்லாமல் சென்னை அணிக்காக அதிக ஆட்ட நாயகன் விருதுகளை வென்ற 2வது ஓபனிங் பேட்டர் என்ற சாதனையும் படைத்தார்.
- மைக் ஹசி - 9.
- ருர்துராஜ் கைக்கவாட் - 7*
- ஷேன் வாட்சன் - 6.
10. நேற்றைய போட்டியில் டாஸ வென்ற எம்எஸ் தோனி டி20 கிரிக்கெட்டில் 150 ஆவது முறையாக டாஸ் வென்றார்.
11. நேற்று 20-வது ஓவரில் வெற்றிக்கு 13 ரன்கள் தேவைப்பட்ட போது 3 பவுண்டரிகள் விளாசிய தோனி வெற்றி பெறச் செய்தார்.
இதன் வாயிலாக ஐபிஎல் கிரிக்கெட்டில் 20 ஆவது ஓவரில் 10க்கும் மேற்பட்ட ரன்களை அதிகமுறை அடித்த வீரர் என்ற பெருமையை அவர் பெற்றார்.
- எம்எஸ் தோனி - 7* முறை.
- கிரண் பொல்லார்ட்/ட்வயன் ப்ராவோ - 4 முறை.
12. அதேபோல் தனது 40 வயது 95 வது நாளில் சென்னையை ஐபிஎல் இறுதிப் போட்டிக்கு அழைத்துச் சென்றுள்ள கேப்டன் எம்எஸ் தோனி ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் மிகவும் அதிக வயதில் இறுதி போட்டியில் கேப்டன்ஷிப் செய்யும் கேப்டன் என்ற பெருமையை பெற உள்ளார்.