ஐபிஎல் 2021 தொடரின் 50வது லீக் போட்டியில் இந்த வருடம் ஐபிஎல் தொடரில் மிகவும் வலுவான அணிகளாக இருக்கும் டெல்லி மற்றும் சென்னை அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன.
Rishab Pant | MS Dhoni (Photo : BCCI/IPL) |
போட்டி விவரம்:
அக்டோபர் 04, போட்டி 50, டெல்லி கேபிட்டல்ஸ் V சென்னை சூப்பர் கிங்ஸ், இரவு 7.30 மணி, துபாய்.
நேரடி ஒளிபரப்பு:
ஸ்டார் போர்ட்ஸ் தொலைக்காட்சி மற்றும் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் மொபைல் ஆப்.
முன்னோட்டம்:
டெல்லி மற்றும் சென்னை ஆகிய 2 அணிகளுமே 2021 ஐபிஎல் தொடரில் இதுவரை பங்கேற்ற 12 போட்டிகளில் 9 வெற்றிகளையும் 3 தோல்விகளையும் சந்தித்து புள்ளி பட்டியலில் தலா 18 புள்ளிகளுடன் முதல் 2 இடங்களை பிடித்துள்ளன.
- இருப்பினும் ரன் ரேட் அடிப்படையில் சென்னை சூப்பர் கிங்ஸ் புள்ளி பட்டியலில் முதல் இடத்தை பிடித்து அசத்தியுள்ளது.
டெல்லி: இரு அணிகளைப் பொறுத்தவரை ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிடல் பேட்டிங் பவுலிங் என அனைத்து துறைகளிலுமே சிறப்பாக விளையாடி வருகிறது.
தவான், ஐயர், பண்ட் என அணியில் இருக்கும் அனைத்து பேட்ஸ்மேன்களும் தேவையான ரன்கள் அடித்து டெல்லிக்கு வெற்றிகளை தேடித்தந்த வருகிறார்கள்.
பேட்டிங்கை விட காகிசோ ரபாடா, நோர்ட்ஜெ, அவேஷ் கான், அக்சர் படேல் ஆகியோரால் அந்த அணியின் பந்துவீச்சு வலுவாக உள்ளது.
கடைசியாக மும்பைக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற அந்த அணி இந்த போட்டியில் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் பிடிக்க தயாராக உள்ளது.
டெல்லி: தோனி தலைமையிலான சென்னை அணியை பொறுத்தவரை அந்த அணிக்கு பேட்டிங்கில் துவக்க வீரர்களான ருதுராஜ் மற்றும் டுப்லஸ்ஸிஸ் தொடர்ந்து நம்பிக்கை கொடுக்கிறார்கள். இறுதியில் ரவீந்திர ஜடேஜா தேவையான ரன்களை அடித்து காப்பாற்றி வருகிறார்.
இருப்பினும் சுரேஷ் ரெய்னா, அம்பத்தி ராயுடு, தோனி போன்ற பேட்ஸ்மேனகள் இன்னும் அந்த அணிக்காக பெரிய ஸ்கோர்கள் அடிக்கவில்லை.
அதேபோல் பந்து வீச்சிலும் அந்த அணியின் பவுலர்களில் ப்ராவோ தொடர்ந்து அசத்தி வருகிறார் ஆனாலும் தீபக் சஹர், ஷார்துல் தாக்கூர்,ஜோஷ் ஹேசல்வுட் போன்றவர்களின் பந்துவீச்சில் முன்னேற்றம் தேவைப்படுகிறது.
கடைசி போட்டியில் ராஜஸ்தானுக்கு எதிராக ருத்ராஜ் தனது முதல் சதத்தை அடித்த போதிலும் மோசமான பந்து வீச்சு காரணமாக சென்னை படுதோல்வியடந்தது, எனவே குறைகளை செய்து சரி செய்து கொண்டு டெல்லிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற சென்னை தயாராக உள்ளது.
முதலிடம் யாருக்கு:
இரு அணிகளுக்குமே இந்த போட்டியில் வெற்றி பெற்று தங்களின் எஞ்சிய 2 போட்டிகளில் தோற்றாலும் கூட லீக் சுற்று முடியும் போது புள்ளி பட்டியலில் முதல் 2 இடங்களில் இருக்க முடியும்.
Chennai Super Kings (Photo : BCCI/IPL) |
- அப்படி இருந்தால் பிளே ஆப் சுற்றில் குவாலிபயர் 1 போட்டியில் விளையாடும் வாய்ப்பு கண்டிப்பாக கிடைக்கும், அப்படி கிடைத்தால் அந்தப் போட்டியில் தோற்றால் கூட பின்னர் நடைபெறும் எலிமினேட்டர் போட்டியில் விளையாடும் வாய்ப்பு கிடைத்து இறுதிப் போட்டிக்கு தகுதி பெற 2 வாய்ப்புகள் கிடைக்கும்.
எனவே இந்த போட்டியில் வெற்றி பெறுவதற்கு சென்னை மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவும் என என்பதில் சந்தேகமில்லை.
புள்ளிவிவரம்:
ஐபிஎல் கிரிக்கெட்டில் இந்த 2 அணிகளும் இதுவரை மொத்தம் 24 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன.
Photo By BCCI/IPL |
- அதில் சென்னை 15 முறை வெற்றி பெற்று முன்னிலையில் உள்ளது, டெல்லி 9 போட்டிகளில் வென்றுள்ளது.
- போட்டி நடைபெறும் ஐக்கிய அரபு நாடுகளில் இவ்விரு அணிகள் மோதிய 3 போட்டிகளில் டெல்லி 2 முறை வென்றுள்ளது, சென்னை 1 போட்டியில் வெற்றி பெற்றது.
இன்னும் குறிப்பாக போட்டி நடக்கும் துபாய் மைதானத்தில் இதற்கு முன் இந்த இரு அணிகள் மோதிய போட்டியில் டெல்லி வெற்றி பெற்றுள்ளது.
பிட்ச் விவரங்கள்:
போட்டி நடைபெறும் துபாய் மைதானம் அபுதாபி மற்றும் சார்ஜா மைதானங்களை விட பேட்டிங் பவுலிங் என அனைத்துக்குமே சமமாக அற்புதமாக கைகொடுக்கிறது, இருப்பினும் கடந்த 6 போட்டிகளில் இந்த மைதானத்தில் சேஸிங் செய்து அணிகள் 4 முறை வெற்றி பெற்றுள்ளன, 2 முறை முதலில் பேட்டிங் செய்த வென்றுள்ளன.
- இந்த மைதானத்தில் நடந்த கடைசி 6 போட்டிகளின் அடிப்படையில் சராசரி முதல் இன்னிங்ஸ் ஸ்கோர் 158 ஆகும்.
ஆகவே இந்த போட்டியில் டாஸ் வெல்லும் கேப்டன் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்வது நல்லது.
உத்தேச அணிகள்:
டெல்லி கேபிட்டல்ஸ்:
வெற்றி பாதையில் நடைபெறும் டெல்லியில் பெரிய அளவில் மாற்றம் இருக்காது என எதிர்பார்க்கலாம்.
ஷிகர் தவான், பிரிதிவி ஷா, ஷ்ரேயஸ் ஐயர், ரிஷப் பண்ட் (கேப்டன் - கீப்பர்), ஸ்டீவ் ஸ்மித், அக்சார் படேல், சிம்ரோன் ஹெட்மயேர், ரவிச்சந்திரன் அஷ்வின், காகிஸோ ரபாடா, அவேஷ் கான், அன்றிச் நோர்ட்ஜெ
சென்னை சூப்பர் கிங்ஸ்:
கடைசி போட்டியில் பந்து வீச்சில் மோசமாக செயல்பட்டு தோற்ற காரணத்தால் டுவைன் பிராவோ அணியில் சேர்க்கப் படலாம்.
ருதுராஜ் கைக்வாட், பாப் டு பிளெஸ்ஸிஸ், மொயின் அலி, அம்பட்டி ராயுடு, சுரேஷ் ரெய்னா, எம்எஸ் தோனி (கேப்டன் - கீப்பர்), ரவீந்தர ஜடேஜா, தீபக் சஹர்/கேஎம் ஆசிப், ஷர்டுல் தாகூர், சம் கரன்/ட்வயன் ப்ராவோ, ஜோஷ் ஹேசல்வுட்.