IPL 2008 - 2021 : 400 கோடி முதல் 7000 கோடி வரை, ஒவ்வொரு ஐபிஎல் அணிகளின் விலை பட்டியல் இதோ

ஐபிஎல் 2021 கிரிக்கெட் தொடர் கோலாகலமாக நடைபெற்று முடிந்துள்ள நிலையில் 2022 சீசனை நடத்துவதற்கு பிசிசிஐ மும்முரமான வேலைகளில் ஈடுபட்டு வருகிறது.

IPL Teams 2022
IPL Teams (Photo : BCCI/IPL)


அதில் முக்கியமாக ஐபிஎல் 2022 தொடருக்காக மெகா ஏலத்தை நடத்த திட்டமிட்டுள்ள பிசிசிஐ புதியதாக 2 அணிகளையும் சேர்க்க முடிவு எடுத்துள்ளது.

புதிய அணிகள்:

இதில் முதல் கட்டமாக ஐபிஎல் 2022 தொடரில் பங்கேற்கும் புதிய 2 அணிகளுக்கான ஏலம் நேற்று துபாயில் நடைபெற்றது, அகமதாபாத் மற்றும் லக்னோ ஆகிய 2 நகரங்களை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த 2 அணிகளை வாங்குவதற்கு அதானி குரூப், கோடக் உள்ளிட்ட இந்தியாவின் முன்னணி 9 மிகப்பெரிய வணிக நிறுவனங்கள் கடும் போட்டி போட்டன.

  • இறுதியில் சஞ்சீவ் கோனேகா ஆர்பிஎஸ்ஜி நிறுவனம் ரூபாய் 7090 கோடிகளுக்கு லக்னோ அணியை ஏலத்தில் எடுத்து அசத்தியது.

இந்த ஆர்பிஎஸ்ஜி நிறுவனம் ஏற்கனவே கடந்த 2016 ஆம் ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகள் தடை செய்யப்பட்ட போது உருவாக்கப்பட்ட ரைசிங் புனே சூப்பர் கிங்ஸ் ஐபிஎல் அணியை விலைக்கு வாங்கி 2016 மற்றும் 2017 ஆகிய 2 சீசனில் பங்கு பெற்றது குறிப்பிடத்தக்கது.

  • அதேபோல ஐபிஎல் 2022 தொடரில் பங்கேற்க இருக்கும் அகமதாபாத் அணியை சிவிசி கேப்பிடல் குரூப் நிறுவனம் 5600 கோடி ரூபாய்களை செலவிட்டு ஏலத்தில் வாங்கியுள்ளது.

இந்த 2 புதிய அணிகளின் அதிகாரப்பூர்வ பெயர்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.

பிரம்மாண்ட ஐபிஎல்:

இதை தொடர்ந்து சென்னை, மும்பை கொல்கத்தா, பெங்களூர், டெல்லி, பஞ்சாப், ராஜஸ்தான், ஹைதராபாத் மற்றும் டெல்லி ஆகிய அணிகளுடன் அஹமதாபாத், லக்னோ அணிகள் என மொத்தம் 10 அணிகளுடன் ஐபிஎல் 2022 தொடர் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது.

  • 2 புதிய அணிகளின் அறிவிப்பால் இதுவரை 60 போட்டிகள் கொண்ட தொடராக நடைபெற்று வந்த ஐபிஎல் அடுத்த வருடம் முதல் 74 போட்டிகள் கொண்ட பிரம்மாண்ட தொடராக நடைபெற உள்ளது.

அதிர்ந்த உலகம்:

வெறும் 2 ஐபிஎல் அணிகள் மட்டும் சுமார் 12,000 கோடி ரூபாய்களுக்கு மேல் ஏலத்தில் விலை போயுள்ளது உலக கிரிக்கெட் ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது, அத்துடன் ஆஸ்திரேலியா இங்கிலாந்து போன்ற வெளிநாட்டு கிரிக்கெட் வாரியங்கள் புதிய ஐபிஎல் அணிகளின் தொகையைப் பார்த்து வியந்து போய் அதிர்ந்து போயுள்ளன என்றே கூறலாம்.

கடந்த 2008 ஆம் ஆண்டு ஒரு சிறிய தொடராக துவங்கிய ஐபிஎல் இன்று ஐசிசி நடத்தும் உலகக் கோப்பைக்கு நிகராக உலகத்தரம் வாய்ந்த தொடராக தன்னைத்தானே மெருகேற்றி கொண்டுள்ளது, அத்துடன் ஐசிசி நடத்தும் உலக கோப்பைகளையும் தாண்டி இந்த தொடரில் வருமானம் கோடிக்கணக்கில் நடைபெறுகிறது.

  • உலக கிரிக்கெட் அரங்கில் இந்தியா ஒரு தவிர்க்க முடியாத மிகப்பெரிய சக்தியாக வளர்ந்து நிற்பதற்கு ஐபிஎல் மிக மிக முக்கிய பங்காற்றி வருகிறது.

IPL 2022
IPL Trophy (Photo : BCCI/IPL)


2008முதல் 2021 வரை:

சரி ஐபிஎல் துவங்கிய 2008 முதல் தற்போது வரை ஐபிஎல் தொடரில் தோற்றுவிக்கப்பட்ட ஒவ்வொரு அணியும் ஏலத்தில் எடுக்கப்பட்ட விலை பற்றிய பட்டியலை பார்ப்போம் வாங்க:

400 கோடிகள் முதல் 7000 கோடிகள்:

1. மும்பை இந்தியன்ஸ் : தற்போது ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் 5 கோப்பைகளுடன் வெற்றிகரமான அணியாக விளங்கும் மும்பை இந்தியன்ஸ் கடந்த 2008 ஆம் ஆண்டு நடைபெற்ற முதல் ஐபிஎல் ஏலத்தில் 447.6 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுக்கப்பட்டது.

  • 2008 ஆம் ஆண்டு ஏலத்தில் எடுக்கப்பட்ட 8 அணிகளில் மிகவும் அதிக தொகைக்கு வாங்கப்பட்ட அணி மும்பையாகும்.

2. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு

விராட் கோலி, ஏபி டி விலியர்ஸ், கிறிஸ் கெயில் என எப்போதும் நட்சத்திர வீரர்களை அடங்கிய அணியாக விளங்கும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு 446 கோடிகளுக்கு 2008 ஏலம் போனது.

3. டெக்கான் சார்ஜெர்ஸ் : ஆஸ்திரேலியாவின் ஜாம்பவான் கில்கிரிஸ்ட் தலைமையில் 2வது ஐபிஎல் சாம்பியன் பட்டத்தை வென்ற டெக்கான் சார்ஜர்ஸ் அணி 428 கோடிகளுக்கு விலையில் வாங்கப் பட்டது.

  • பின்னர் அந்த அணி கலைக்கப்பட்டு தற்போது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

4. சென்னை சூப்பர் கிங்ஸ் : எம்எஸ் தோனி தலைமையில் தமிழ்நாட்டின் தலைநகரமான சென்னையை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் 2008 ஏலத்தில் 364 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனம் வாங்கியது.

  • தற்போது 4 கோப்பைகளுடன் ஐபிஎல் தொடரின் 2வது வெற்றிகரமான அணியாக சென்னை தமிழ் நாட்டு மக்களுக்கு பெருமை சேர்த்துள்ளது.

5. டெல்லி கேபிட்டல்ஸ் : டெல்லி டேர்டெவில்ஸ் என்ற பெயரில் 2008 ஆம் ஆண்டு துவக்கப்பட்ட டெல்லி அணி 336 கோடிகளுக்கு வாங்கப்பட்டது, தற்போது இந்த அணி டெல்லி கேப்பிடல் என்ற பெயரில் விளையாடி வருகிறது.

6. பஞ்சாப் கிங்ஸ் : பாலிவுட் நடிகை பிரீத்தி ஜிந்தா பார்ட்னர்ஷிப்பில் பஞ்சாப்பை மையமாக வைத்து 304 கோடிகளுக்கு கிங்ஸ் லெவன் பஞ்சாப் என்ற பெயரில் வாங்கியது, தற்போது இந்த அணி பஞ்சாப் கிங்ஸ் என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

7. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் : பாலிவுட் சூப்பர் ஸ்டார் நடிகர் ஷாருக்கான் கொல்கத்தா அணியை 300 கோடி ரூபாய்க்கு 2008ஆம் ஆண்டு ஏலத்தில் வாங்கினார்.

8. ராஜஸ்தான் ராயல்ஸ் : 2008இல் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 264 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுக்கப்பட்டது, முதல் சீசனிலேயே அந்த அணி கோப்பையை வென்று சாதனையும் படைத்தது.

9. சஹாரா புனே வாரியர்ஸ் : தற்போது போலவே கடந்த 2011ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் புதிதாக மேலும் 2 அணிகள் சேர்க்கப்பட்டன, அதில் புனே வாரியர்ஸ் இந்தியா அணி 1702 கோடிகளுக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டது ஒரு சில வருடங்களுக்கு பின்னர் இந்த அணி கலைக்கப்பட்டது.

10. கொச்சி டஸ்கர்ஸ் கேரளா : தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளாவை மையமாக வைத்து கொச்சி டஸ்கர்ஸ் கேரளா அணி ரூபாய் 1533 கோடிகளுக்கு ஏலம் போனது இருப்பினும் இந்த அணியும் பின்னர் கலைக்கப்பட்டது.

Previous Post Next Post

Your Reaction