பாகிஸ்தானுடன் போட்டியிடும் அளவுக்கு இந்தியா இல்லை - அப்துல் ரசாக்

கிரிக்கெட்டில் ஆசிய கண்டத்தில் பரம எதிரிகளாக இருக்கும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய அணிகள் எல்லைப் பிரச்சினைகள் உள்ளிட்ட பல காரணங்களுக்காக கடந்த பல வருடங்களாக நேருக்கு நேர் மோதும் கிரிக்கெட் தொடர்களில் பங்கேற்காமல் இருந்து வருகின்றன.

Abdul Razzaq On India (Photo Credits : Getty)

இருப்பினும் ஐசிசி மற்றும் ஆசிய கோப்பை போன்ற பெரிய தொடர்களில் மட்டும் வேறு வழியின்றி மோதி வருகின்றன. இந்த நிலைமையில் சமீபத்தில் பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருந்த நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகள் தங்களது கிரிக்கெட் தொடர்களை பாதுகாப்பு காரணங்களுக்காக ரத்து செய்தன.

இந்தியா மீது விமர்சனம்:

அந்த 2 வெளிநாடுகளும் தங்களது கிரிக்கெட் தொடரை ரத்து செய்ததற்கு இந்தியாதான் காரணம் பாகிஸ்தானின் முன்னாள் வீரர்கள் முதல் ரசிகர்கள் வரை அனைவரும் வெளிப்படையாகவே கடந்த சில வாரங்களாகவே விமர்சித்து வருகிறார்கள்.

இந்நிலையில் பாகிஸ்தானைச் சேர்ந்த முன்னாள் ஆல்ரவுண்டர் அப்துல் ரசாக் இந்தியா மீது மீண்டும் ஒரு அதிரடியான விமர்சனத்தை வைத்துள்ளார். இதுபற்றி நேற்று ஏஆர்ஒய் எனும் பாகிஸ்தானைச் சேர்ந்த தொலைக்காட்சியின் நிகழ்ச்சி ஒன்றில் அவர் பங்கேற்றார்.

Photo By BCCI/IPL


அப்போது, "பாகிஸ்தான் அளவுக்கு இந்திய அணியில் வேகப்பந்து வீச்சாளர்கள் மற்றும் ஆல்ரவுண்டர் உள்ளார்களா" என நிகழ்ச்சி தொகுப்பாளர் கேள்வி கேட்டார். அதற்கு,

"பாகிஸ்தானுடன் போட்டி போடும் அளவுக்கு இந்தியா இல்லை என நினைக்கிறேன், பாகிஸ்தானிடம் இருக்கும் திறமைகள் முற்றிலும் மாறுபட்டது அத்துடன் இந்தியாவும் பாகிஸ்தானும் மோதிக் கொள்ளாமல் இருப்பது கிரிக்கெட்டுக்கு நல்லது என எனக்குத் தோன்றவில்லை. அது வீரர்கள் தங்களுக்கு ஏற்படும் மிகப்பெரிய சவால்களை எப்படி சமாளிக்கிறார்கள் என்பதை காட்டுவதற்கு உதவும், அதனாலேயே அது தவறியுள்ளது. இது இப்படியே தொடர்ந்தால் பாகிஸ்தானிடம் இருக்கும் திறமைகள் இந்தியாவிடம் இல்லாததை மக்கள் புரிந்து கொள்வார்கள்"

என சம்மந்தமில்லாமல் பதிலளித்த அப்துல் ரசாக் கடந்த பல வருடங்களாகவே இந்தியாவை விட மிகவும் உலகத்தரம் வாய்ந்த திறமையான கிரிக்கெட் வீரர்களை பாகிஸ்தான் உருவாக்கி வருவதாக தெரிவித்தார்

கபில்தேவ் விட இம்ரான் கான் பெஸ்ட்:

"இந்தியாவும் ஒரு நல்ல அணிதான் என நான் கூறாமல் இருக்க மாட்டேன் அவர்களிடமும் நல்ல வீரர்கள் உள்ளார்கள் ஆனால் திறமையின் அடிப்படையில் பார்க்கும் போது எங்களிடம் இம்ரான்கான் இருந்தார் அவர்களிடம் கபில்தேவ் இருந்தார், ஆனாலும் அவர்களிடம் இல்லாத வாசிம் அக்ரம் போன்ற ஒரு மகத்தான வீரர் எங்களிடம் இருந்தார்"

"எங்களிடம் ஜாவித் மியான்தத் இருந்தார் அவர்களிடம் சுனில் கவாஸ்கர் இருந்தார், ஒப்பிடுவதற்கு இதில் எதுவுமே இல்லை எங்களிடம் யூனிஸ் கான், சாகித் அப்ரிடி, யூசுப் போன்றவர்கள் இருந்தனர் அவர்களிடம் டிராவிட், சேவாக் போன்றவர்கள் இருந்தனர். ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது பாகிஸ்தான் எப்போதுமே தரமான வீரர்களை உருவாக்கி உள்ளது, இவை அனைத்துமே மிகப் பெரிய காரணங்கள் இதன் காரணமாகவே இந்தியா எங்களுடன் போட்டியிட மறுக்கிறது".

என தகுதியற்ற திறமையற்ற வீரர்களை வைத்திருப்பதாலேயே சமீப காலமாக இந்தியா தங்களுடன் கிரிக்கெட் தொடரில் பங்கேற்காமல் இருப்பதற்கு மிக மிக முக்கிய காரணம் என அப்துல் ரசாக் மேலும் பேசினார்.

  • இருப்பினும் அவர் கூறும் அத்தனை உலகத்தரம் வாய்ந்த வீரர்களை வைத்துக் கொண்டும் கூட உலக கோப்பையில் இந்தியாவை பாகிஸ்தானால் ஒரு முறை கூட ஏன் வீழ்த்த முடியவில்லை என்று அப்துல் ரசாக் அவரின் மனசாட்சியை கேட்டுக்கொள்ள வேண்டும்.

அடுத்ததாக இந்தியாவும் பாகிஸ்தானும் வரும் அக்டோபர் 24ஆம் தேதி துபாயில் நடைபெறும் 2021 டி20 உலக கோப்பையின் லீக் போட்டியில் நீண்ட நாட்களுக்கு பின் மோத உள்ளது குறிப்பிடத்தக்கது.

Previous Post Next Post

Your Reaction