இந்திய டி20 கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவியில் இருந்து வரும் 2021 டி20 உலகக் கோப்பையுடன் விலக இருப்பதாக தற்போதைய கேப்டன் விராட் கோலி கடந்த மாதம் அறிவித்தார், அந்த அறிவிப்பு வெளியான ஒரு சில நாட்களிலேயே ஐபிஎல் தொடரில் கேப்டன் பொறுப்பு வகிக்கும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் கேப்டன் பதவியில் இருந்தும் இந்த சீசனுடன் விலகுவதாக அவர் அறிவித்ததார்.
Photo : BCCI/IPL |
இருப்பினும் இந்தியா மற்றும் பெங்களூரு ஆகிய 2 டி20 அணிகளுக்குமே தொடர்ந்து ஒரு சாதாரண வீரராக விளையாட உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார், அவரின் இந்த அடுத்தடுத்த அறிவிப்புகளால் விராட் கோலியின் ரசிகர்கள் மிகவும் சோகம் அடைந்துள்ளார்கள்.
2019இல் முடிவு:
இந்நிலையில் பெங்களூர் அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகும் முடிவை 2019 ஆம் ஆண்டிலேயே எடுத்து விட்டதாக விராட் கோலி கூறியுள்ளார். இதுபற்றி ஸ்டார்ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் எழுப்பப்பட்ட ஒரு கேள்விக்கு அவர்,
என கூறிய விராட் கோலி தனது கேப்டன்ஷிப் முடிவு பற்றி ஏபி டிவில்லியர்ஸ் உடன் முன்கூட்டியே விவாதித்ததாகவும் 2020 ஆம் ஆண்டு கேப்டன்ஷிப் செய்வதற்கு அவர் கொடுத்த ஆதரவு தான் முக்கிய காரணம் எனவும் தெரிவித்தார். ஒரு டீ வில்லியர்ஸ் ஆதரவு அளிக்காமல் போயிருந்தால் கடந்த வருடமே கேப்டன் பதவியில் இருந்து அவர் விலகி இருப்பார் என தெரியவருகிறது
எட்டாத கனி:
கடந்த 2013 முதல் பெங்களூர் அணிக்காக கேப்டன்ஷிப் செய்து வரும் விராட் கோலி ஒருமுறைகூட கோப்பையை வென்று கொடுக்க முடியவில்லை என்ற விமர்சனத்தை தொடர்ந்து சந்தித்து வந்து கொண்டிருக்கிறார்.
ஒரு பேட்டராக அதிரடியாக விளையாடி மழைபோல ரன்கள் குவித்த போதிலும் அவரால் பெங்களூருக்காக ஒரு ஐபிஎல் கோப்பையை கூட கேப்டனாக பெற்றுத்தர முடியவில்லை, இதன் காரணமாக பல முன்னாள் வீரர்களும் கேப்டன் பதவியில் இருந்து விராட் கோலி விலகினால் மட்டுமே பெங்களூரு அணி கோப்பையை வெல்ல முடியும் என வெளிப்படையாகவே கூறினார்கள்.
பெருமை படுகிறேன்:
இந்த வேளையில் இந்த வருடத்துடன் கேப்டன்சிப் பதவியிலிருந்து விராட் கோலி விலகுவது பற்றி அவருக்கு அதிக ஆதரவு கொடுத்த நட்சத்திர வீரர் ஏபி டிவிலியர்ஸ் பேசுகையில்,
என விராட் கோலி தலைமையில் விளையாடுவதற்கு மிகுந்த பெருமைப்படுவதாக உலகின் தலைசிறந்த பேட்டராக கருதப்படும் ஏபி டிவிலியர்ஸ் தெரிவித்தார்.
விராட் கோலி கடைசியாக கேப்டன்ஷிப் செய்யும் இந்த 2021 ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்ட ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி புள்ளி பட்டியலில் 3வது இடம் பிடித்து பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது, இதனால் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ள விராட் கோலி தனது கடைசி சீசனில் பெங்களூருவுக்காக கேப்டனாக கோப்பையை வெல்ல நடைபெற இருக்கும் பிளே ஆப் சுற்றில் தனது முழு மூச்சுடன் போராட உள்ளார்.