டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளுக்கான பவுலர்கள் தரவரிசையில் 2-வது இடத்தில் தமிழகத்தைச் சேர்ந்த ரவிச்சந்திரன் அஸ்வின் உள்ளார்.
Virat Kohli | Ravichandran Ashwin (Photo : BCCI) |
டாப் 10 பந்துவீச்சாளர்களில் 9 வேகப்பந்து வீச்சாளர்களுக்கு மத்தியில் ஒரே சுழல்பந்து வீச்சாளராக ரவிச்சந்திரன் அஸ்வின் இருப்பது இந்திய ரசிகர்களுக்கு பெருமையான விஷயமாக உள்ளது.
இங்கிலாந்தில் இல்லை :
வரலாற்றின் முதல் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பை தொடரில் 2019 - 21 அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய பந்துவீச்சாளராகவும் (71 விக்கெட்கள்) அவர் சாதனை படைத்துள்ளார், இருப்பினும் கூட டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி நடந்த சில வாரங்களுக்குப்பின் அதே இங்கிலாந்தில் துவங்கிய 5 போட்டிகள் கொண்ட இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அவருக்கு ஒரு போட்டியில் கூட வாய்ப்பு கிடைக்கவில்லை.
Team India (By Getty Images) |
குறிப்பாக 3வது போட்டியில் தோற்ற பின் இங்கிலாந்து முன்னாள் ஜாம்பவான்கள் பலர் அஸ்வினை கண்டிப்பாக இந்திய அணியில் சேர்க்க வேண்டும் என போர்க்கொடி தூக்கினார்கள். அப்போதும்கூட 4வது போட்டியில் அஸ்வினுக்கு வாய்ப்பளிக்கப்படவில்லை, இறுதியில் அந்த தொடரில் இந்தியா 2 - 1 என முன்னிலை பெற்றதை அடுத்து இந்த விஷயம் பெரிதாக பேசப்படவில்லை.
ரவிச்சந்திரன் அஷ்வின் புகார் :
இந்த நிலையில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பை இறுதிப்பட்டியில் தோற்ற பின் இந்திய வீரர்களை இன்னும் சிறப்பாக விளையாடவில்லை என கேப்டன் விராட் கோலி திட்டியதாக தெரிகிறது, இதன் காரணமாக அணியில் இருக்கும் சில மூத்த வீரர்கள் குறிப்பாக தமிழகத்தை சேர்ந்த ரவிச்சந்திரன் அஸ்வின் பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா விடம் விராட் கோலி பற்றி புகார் அளித்ததாக ஐஏஎன்எஸ் இணையதளத்தில் செய்தி வெளியாகியுள்ளது.
- அதன் காரணமாகத்தான் ரவிச்சந்திரன் அஸ்வின் இங்கிலாந்து தொடரில் வாய்ப்பளிக்கப்படாமல் பெஞ்சில் அமர வைக்கப்பட்டார் எனவும் தெரிய வருகிறது.
சஹால் பிரச்சனை :
அந்த நிலைமையில் வரும் அக்டோபரில் துவங்க இருக்கும் ஐசிசி 2021 டி20 உலக கோப்பை இந்திய அணியில் சுழற்பந்து வீச்சாளராக ஐபிஎல் தொடரில் தாம் கேப்டன்ஷிப் செய்யும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியில் இடம் வகிக்கும் யுஸ்வென்ற சஹால் வேண்டும் என இந்திய தேர்வு குழுவினரிடம் விராட் கோலி கேட்டதாக தெரிகிறது.
Photo By BCCI |
ஆனால் அதற்கு தேர்வுக் குழுவினர் சம்மதம் தெரிவிக்காத நிலையில் துணைக் கேப்டன் ரோகித் சர்மா உள்ளிட்டோரின் ரவிச்சந்திரன் அஸ்வின் விளையாட வேண்டும் என்ற கருத்துக்கு இணங்க அவர் அணியில் தேர்வு செய்துள்ளார்கள்.
கேப்டன் பதவி ராஜினாமா:
தாம் கேட்ட வீரர் அணியில் கிடைக்காத காரணத்தால் 2021 டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்ட அடுத்த சில நாட்களில் விராட் கோலி தனது டி20 கேப்டன் பதவியில் இருந்து விலகினார் எனவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஏற்கனே கடந்த 2017க்கு பின் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளுக்கான இந்திய அணியில் இருந்து ரவிச்சந்திரன் அஸ்வினை விராட் கோலி தான் கழட்டி விட்டார் என ரசிகர்கள் அனைவரும் அறிவார்கள்.
Virat Kohli (Photo By Getty Images) |
அத்துடன் கேப்டனாக ஒரு ஐசிசி உலக கோப்பையை கூட வெல்லவில்லை என்ற விமர்சனமும் அவர் மீது இருந்த காரணத்தாலும் டி20 கேப்டன் பதவியில் இருந்து விராட் கோலி விலகியுள்ளதாக தெரிகிறது.
இருப்பினும் வெளி உலகத்திற்கு அந்த பதவியில் இருந்து விலகுவதற்கு பணிச்சுமை தான் எனக்கூறி விராட் கோலி சமாளித்து விட்டார் என தெரிய வருகிறது.