ராகுல் டிராவிட் பயிற்சியாளர், எம்எஸ் தோனி ஆலோசகராக வந்தால் வரமாக இருக்கும் - எம்எஸ்கே பிரசாத்

இந்திய கிரிக்கெட் அணியின் தற்போதைய பயிற்சியாளர் ரவி சாஸ்திரியின் பதவிக்காலம் வரும் அக்டோபரில் நடைபெற இருக்கும் 2021 டி20 உலகக் கோப்பையுடன் முடிவடைகிறது.

MS Dhoni | Rahul Dravid (Photo : Getty)

கடந்த 2017 சாம்பியன்ஸ் கோப்பைக்கு பின்பு முதல் இந்தியாவின் பயிற்சியாளராக இருந்து வந்த ரவி சாஸ்திரியின் பதவி காலம் 2019ஆம் ஆண்டு நடைபெற்ற உலக கோப்பைக்கு பின் மீண்டும் 2 வருடங்கள் நீட்டிக்கப்பட்டது.

பதவி போதும்:

இதை அடுத்து 2021 டி20 உலகக்கோப்பைக்கு பின் பயிற்சியாளர் பதவியில் நீடிக்க போவதில்லை என ஏற்கனவே ரவிசாஸ்திரி உறுதிப்படுத்தியுள்ளார், இதை தொடர்ந்து இந்தியாவின் அடுத்த தலைமை பயிற்சியாளராக முன்னால் இந்திய ஜாம்பவான்கள் அனில் கும்ப்ளே அல்லது விவிஎஸ் லக்ஷ்மன் ஆகியோரை நியமிக்கலாம் என இந்திய கிரிக்கெட் வாரியம் யோசித்து வருகிறது.

எம்எஸ்கே பிரசாத் :

இந்த வேளையில் இந்தியாவின் அடுத்த பயிற்சியாளராக ஜாம்பவான் ராகுல் டிராவிட்டை நியமிக்கலாம் என இந்தியாவின் முன்னாள் தேர்வு குழு தலைவர் எம் எஸ் கே பிரசாத் கூறியுள்ளார். இந்தியாவின் அடுத்த பயிற்சியாளர் பற்றி அவர் ஸ்போர்ட்ஸ் டக் இணையத்தில்,

எனது மனதுக்குள் இந்த உணர்வு தோன்றுகிறது, சமீபத்தில் என்னுடைய கல்லூரி நண்பர்கள் ரவிசாஸ்திரி ஓய்வு பெற்ற பிறகு ராகுல் டிராவிட் பயிற்சியாளராகவும் எம்எஸ் தோனி ஆலோசகராகவும் வருவார்கள் என என்னிடம் சவால் விட்டனர். நானும் ஐபிஎல் தொடரில் வர்ணனை செய்யும் போது சக வர்ணனையாளர்களிடம் இதைப் பற்றி விவாதித்தேன். கடுமையாக உழைக்க கூடியவராக இருக்கும் ராகுல் டிராவிட் இந்திய அணிக்கு ரவி சாஸ்திருக்கு பின் நல்ல மதிப்பை சேர்ப்பார் என உணர்கிறேன்

என கூறிய பிரசாத் இந்திய அணியின் அடுத்த தலைமை பயிற்சியாளராக கடுமையாக உழைக்க கூடிய ராகுல் டிராவிட் வரவேண்டும் என தனது விருப்பத்தை தெரிவித்தார். ஏற்கனவே அவர் தற்போது இந்தியாவின் 19 வயது மற்றும் ஏ அணிகளுக்கான பயிற்சியாளராக சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.

Photo By Getty 


இதன் காரணமாக சமீபகாலமாக உலகளவில் மற்ற அணிகளை காட்டிலும் இந்தியாவில் அதிக தரமான இளம் கிரிக்கெட் வீரர்கள் உருவாகி வெற்றிகளை தேடித் தந்து வருகிறார்கள்.

தோனியும் வேண்டும்:

ராகுல் பயிற்சியாளராகவும் எம்எஸ் தோனி ஆலோசகராகவும் வந்தால் அது இந்திய கிரிக்கெட்டின் வரப்பிரசாதமாக அமையும். இருவருமே நிதானத்தை கடைபிடித்து கடினமாக உழைக்கக் கூடிய நன்மதிப்பு மிக்கவர்கள். முக்கியமாக தற்போது அண்டர் 19 மற்றும் ஏ ஆகிய இந்திய அணிகளுக்கு பயிற்சியாளராக இருக்கும் ராகுல் டிராவிட் பல தரமான இளம் வீரர்களை உருவாக்கி வருகிறார். ஒருவேளை ராகுல் டிராவிட் பயிற்சியாளராகவும் எம்எஸ் தோனி ஆலோசகராகவும் நியமிக்க படாவிட்டால் நான் மிகவும் ஏமாற்றம் அடைவேன்

என எம்எஸ்கே பிரசாத் தெரிவித்தார். இந்திய கிரிக்கெட்டில் ராகுல் டிராவிட் மற்றும் எம்எஸ் தோனி ஆகியோர் சீனியர் மற்றும் ஜூனியர் என அனைத்து வீரர்களுக்கு மத்தியில் மிகவும் கௌரவமிக்க 2 ஜாம்பவான் வீரர்களாக வலம் வருகிறார்கள், இதில் ஏற்கனவே ராகுல் டிராவிட் பெங்களூருவில் இருக்கும் தேசிய அகடமியின் இயக்குனராக செயல்பட்டு பல தரமான இளம் வீரர்களை உருவாக்கி வருகிறார்.

அதேபோல் சமீபத்தில் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற எம்எஸ் தோனி ஏற்கனவே வரும் 2021 டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியின் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார், எனவே இந்த இருவரும் வருங்காலத்தில் இந்திய அணியின் பயிற்சியாளர் குழுவில் நியமிக்கப்பட்டால் இந்திய ரசிகர்களுக்கு அதைவிட வேறு மகிழ்ச்சியான செய்தி இருக்க முடியாது.

Previous Post Next Post

Your Reaction