ஐபிஎல் 2021 தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி இதுவரை பங்கேற்ற 10 போட்டிகளில் 2 வெற்றிகள் மட்டும் பெற்று 99% ப்ளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறும் வாய்ப்பை இழந்து விட்டது.
வார்னர் மீது பழி :
இந்த வருடம் ஐபிஎல் தொடங்கியது முதலே அந்த அணி சிறப்பாக விளையாட தவறி வந்தது.
David Warner (Photo : BCCI/IPL) |
இதன் காரணமாக அந்த மொத்த பழியையும் கேப்டனாக இருந்த டேவிட் வார்னர் மீது சுமத்திய அந்த அணி நிர்வாகம் பாதியிலேயே அவரை கேப்டன் பதவியில் இருந்து நீக்கியது.
அவ்வளவு மோசம் இல்லை:
இந்த வருடம் 8 இன்னிங்ஸ்சில் 196 ரன்கள் மட்டும் குவித்துள்ள அவர் பார்மில் இல்லை என்பது உண்மைதான் ஆனால் இந்தியாவில் நடைபெற்ற 2021 ஐபிஎல் தொடரின் முதல் பாகத்தில் 2 அரை சதங்கள் அடித்து தன்னால் முடிந்த வரை முயன்ற அளவுக்கு ரன்களை சேர்த்து வெற்றிபெற பாடுபட்டார்.
Photo By BCCI/IPL |
டேவிட் வார்னர் சிறப்பாக செயல்படவில்லை என்று நினைக்கும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி நிர்வாகம் அதே தருணத்தில் அவரை தவிர அணியில் இருந்த எஞ்சிய பேட்ஸ்மேன்கள் எவ்வளவு ரன்கள் குவித்து எத்தனை வெற்றிகளை தேடி கொடுத்தார்கள் என்று யோசிக்க தவறி விட்டார்கள்.
மோசமான நிர்வாகம்:
ஒன்று ஐபிஎல் தொடங்குவதற்கு முன் செய்திருக்க வேண்டும் இல்லையேல் ஐபிஎல் முடிந்தபின் அவரை கேப்டன் பதவியிலிருந்து நீக்கி இருந்திருக்க வேண்டும் அதையும் செய்யவில்லை, சரி கேப்டன் பதவியில் இருந்து நீக்கியது அதுமட்டுமில்லாமல் அணியில் ஒரு வீரராக கூட இடம் கிடைக்காமல் மொத்தமாக பெஞ்சில் அமர வைத்து கூல் ட்ரிங்ஸ் தூக்கிவைத்து கிரிக்கெட் ரசிகர்களின் மனதை உடைத்தனர்.
மனமுடைந்த வார்னர்:
துபாயில் துவங்கிய 2வது பாகத்திலும் 2 முறை மட்டுமே வார்னருக்கு வாய்ப்பளித்து மீண்டும் ஹைதராபாத் அணி நிர்வாகம் நேற்றைய போட்டியில் நீக்கியது.
Photo By BCCI/IPL |
இதனால் மனம் உடைந்துபோன டேவிட் வார்னர்,
இனி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு மீண்டும் பேட்டிங் செய்யப்போவதில்லை இருப்பினும் தொடர்ந்து உங்கள் ஆதரவை கொடுங்கள்
என தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்துள்ளார். இந்த பதில் வாயிலாக நமக்கு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக டேவிட் வார்னர் இனி விளையாட போவதில்லை என தெளிவாக தெரியவருகிறது.
பிராண்ட் :
கடந்த 2013ஆம் தோற்றுவிக்கப்பட்ட சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு 2015 முதல் டேவிட் வார்னர் கேப்டனாக செயல்பட்டு வந்தார்.
- 2015 முதல் 2020 வரை தொடர்ந்து ஒரு சீசனில் கூட சோடை போகாமல் 500க்கும் மேற்பட்ட ரன்களை குவித்து அந்த அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக திகழ்ந்து வந்தார்.
- 2016 ஆம் ஆண்டு கேப்டனாக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு சாம்பியன் பட்டத்தையும் வென்று கொடுத்தார், மொத்தத்தில் ஐபிஎல் கிரிக்கெட்டில் சன் ரைசெர்ஸ் ஹைதெராபாத் எனும் பிராண்டை உருவாக்கியதில் டேவிட் வார்னருக்கு 90% பங்கு உள்ளது எனக் கூறலாம்.
அளப்பரிய சாதனைகள்:
சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக புள்ளிவிவரங்கள் அடிப்படையில் அவர் செய்துள்ள அளப்பரிய சாதனைகள் பட்டியல் இதோ:
Photo By BCCI/IPL |
1. 4014 ரன்களுடன் ஹைதராபாத் அணிக்கு அதிக ரன்கள் அடித்த பேட்ஸ்மேன்.
2. ஹைதராபாத் அணிக்காக ஒரு ஐபிஎல் போட்டியில் அதிகபட்ச ஸ்கோர் அடித்த பேட்ஸ்மேன் - 126 ரன்கள்.
3. அந்த அணிக்காக அதிக பேட்டிங் சராசரி மற்றும் ஸ்ட்ரைக் ரேட் கொண்ட அற்புதமான பேட்ஸ்மேன்.
- சராசரி - 49.55.
- 142.59 - ஸ்ட்ரைக் ரேட்.
4. சன்ரைசர்ஸ் அணிக்காக அதிகமுறை 50+ ரன்கள் அடித்த பேட்ஸ்மேன் - 42 முறை 50+ ரன்கள்.
5. ஐபிஎல் கிரிக்கெட்டில் ஒரே சீசனில் 2 சதங்கள் அடித்த ஒரே ஹைதராபாத் பேட்ஸ்மேன் - 2016ஆம் ஆண்டு.
6. ஐபிஎல் தொடரில் ஒரு குறிப்பிட்ட சீசனில் அதிக ரன்கள் விளாசிய ஹைதராபாத் பேட்ஸ்மேன் - 848 ரன்கள் (2016ஆம் ஆண்டு).
7. 2015 முதல் 2020 வரை தொடர்ந்து 5 ஆண்டுகள் 500க்கும் மேற்பட்ட ரன்கள் அடித்த ஒரே ஹைதராபாத் வீரர்.
8. ஹைதெராபாத் அணிக்காக அதிக வெற்றிகளை குவித்த கேப்டன் - 53.73% சதவீத வெற்றிகள்.
9. ஐபிஎல் கிரிக்கெட்டில் அதிக கேட்ச்கள் பிடித்த ஹைதராபாத் வீரர் - 44 கேட்ச்கள்.
10. ஹைதராபாத் அணிக்காக மட்டுமல்லாமல் ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றிலேயே 3 முறை ஆரஞ்சு தொப்பி வென்ற ஒரே ஒரு வீரர்.
10. 2016ஆம் ஆண்டு ஹைதராபாத் அணிக்காக முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்ற கேப்டன்.
- இது மட்டுமல்லாமல் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் "புட்ட பொம்ம" நடனமாடி ஹைதராபாத் மக்களையும் ரசிகர்களையும் மகிழ்வித்த மாமனிதர்.
இப்படி ஹைதராபாத்க்காக எத்தனையோ விசயங்களை செய்து கொடுத்த டேவிட் வார்னருக்கு தற்போது நேர்ந்த கதியை நினைக்கும் போது நமக்கே இவ்வளவு நெஞ்சம் உடைகின்றது என்றால் அவருக்கு எப்படி இருக்கும்.