அக்டோபரில் ஐக்கிய அரபு நாடுகளில் ஐசிசி டி20 உலகக்கோப்பை 2021 தொடர் 7வது முறையாக கோலாகலமாக தொடங்க உள்ளது, இந்த தொடருக்காக விராட் கோலி தலைமையிலான 15 பேர் கொண்ட இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.
Chahal | Chahar (Photo : BCCI/IPL) |
அந்த அணியில் அனைவரும் எதிர்பார்த்த யுஸ்வென்ற சஹால் எடுக்காதது இந்திய ரசிகர்களிடையே பெருத்த ஆச்சரியத்தை ஏற்படுத்தியது, அவர் கடந்த 3 - 4 வருடங்களாக ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளுக்கான இந்திய அணியில் தொடர்ந்து விளையாடி நம்பிக்கை நட்சத்திரமாக இருந்து வருகிறார்.
இருப்பினும் சமீப காலமாக அனைத்து விதமான கிரிக்கெட்டிலும் இவர் சற்று பார்ம் இல்லாமல் இருந்தார், அதன் காரணமாகவே அவர் டி20 உலக கோப்பை இந்திய அணியில் இருந்து கழற்றி விடப்பட்டுள்ளார்.
ராகுல் சஹர் :
அவருக்கு பதில் ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி வரும் ராகுல் சஹர் சேர்க்கப்பட்டார், இவர் கடந்த மாதம் இலங்கையில் நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் மட்டுமே விளையாடிய அனுபவம் கொண்டவர், பெரிய அனுபவம் இல்லாத போதிலும் நேரடியாக டி20 உலகக்கோப்பை அணியில் அவருக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.
Team India - Photo By BCCI |
வாய்ப்பின் காரணம் :
போட்டி நடைபெறும் ஐக்கிய அரபு நாடுகளில் சற்று வேகமாக வீசக்கூடிய சுழல் பந்துவீச்சாளர் இந்திய அணியில் இருக்க வேண்டுமென நினைப்பதாலேயே ராகுல் சஹருக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார் என தேர்வு குழுவினர் அவரின் தேர்வு பற்றி கூறினார்கள்.
தடுமாறும் சஹர் :
இந்த நிலையில் துபாயில் நடக்கும் ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி வரும் ராகுல் சகர் தடுமாறி வருகிறார்.
ஐக்கிய அரபு நாடுகளில் நடந்த ஐபிஎல் போட்டிகளில் ராகுல் சஹர் (2020 மற்றும் 2021):
- விக்கெட்கள் - 17.
- எக்கனாமி - 8.07.
- சராசரி - 32.03.
- ஸ்ட்ரைக் ரேட் - 24.00.
- ஐக்கிய அரபு நாடுகளில் நடந்த ஐபிஎல் போட்டிகளில் யூஸ்வென்ற சஹால் ( 2020 - 2021):
- விக்கெட்கள் - 35.
- எக்கனாமி - 6.42.
- சராசரி - 16.50.
- ஸ்ட்ரைக் ரேட் - 15.40.
இதிலிருந்தே ஐக்கிய அரபு நாடுகளில் ராகுல் சஹர் தடுமாறுகிறார் என்பதும் யூஸ்வென்ற சஹால் கலக்குகிறார் என்பதும் தெளிவாகிறது.
கலக்கும் சஹால் :
துபாயில் முழுமையாக நடைபெற்ற 2020 ஐபிஎல் தொடரில் சஹால் மொத்தம் 21 விக்கெட்டுகள் எடுத்த அசத்தியுள்ளார், மேலும் தற்போது நடைபெற்று வரும் 2023 ஐபிஎல் தொடரில் இதுவரை மொத்தம் 11* விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.
குறிப்பாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக நேற்று நடைபெற்ற போட்டியில் 2 விக்கெட்டுகள் எடுத்து பெங்களூரு அணியின் வெற்றிக்கு வித்திட்டு ஆட்டநாயகன் விருதையும் வென்று தம்மை தேர்வு செய்யாத இந்திய தேர்வு குழுவினருக்கு பதிலடி கொடுத்துள்ளார்.
ஐபிஎல் கிரிக்கெட்டில் சஹால் இதுவரை 4 ஆட்ட நாயகன் விருதுகளை வென்றுள்ளார், அந்த 4 ஆட்டநாயகன் விருதுகளும் ஐக்கிய அரபு நாடுகளில் வென்றுள்ளார்.
தவறவிட்டதா இந்தியா :
ஐசிசி 20 ஓவர் உலக கோப்பை 2021 தொடர் தொடங்குவதற்கு இன்னும் 20 நாட்களே எஞ்சியுள்ள நிலையில் தடுமாறி வரும் சஹருக்கு பதில் தற்போது நல்ல பார்மில் இருக்கும் சஹாலை இந்தியா தவறவிட்டு விட்டதோ என்று இந்திய ரசிகர்கள் கருதுகிறார்கள்.
டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் மொத்தம் 5 சுழல் பந்துவீச்சாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள், இதில் தமிழகத்தைச் சேர்ந்த வருண் சக்கரவர்த்தி தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்காக சிறப்பாக பந்து வீசி வருகிறார்.
அணியில் இடம் கிடைக்குமா :
ரவீந்திர ஜடேஜா இந்திய அணியில் நேரடியாக விளையாடுவார், 4 ஆண்டுகளுக்கு பின் தேர்வு செய்யப்பட்டுள்ள ரவிச்சந்திரன் அஸ்வின் ஆடும் லெவன் அணியில் வாய்ப்பு கிடைப்பது கடினம்.
வரும் அக்டோபர் 10 ஆம் தேதி வரை உலக கோப்பை இந்திய அணியில் மாற்றங்களை செய்வதற்கு பிசிசிஐக்கு உரிமை உள்ளது, எனவே தற்போது போலவே எஞ்சிய ஐபிஎல் போட்டிகளிலும் சஹால் சிறப்பாக செயல்படும் பட்சத்தில் ராகுல் சாகர் அல்லது அக்சர் பட்டேல் ஆகிய யாரேனும் ஒருவருக்கு பதில் 2021 டி20 உலக கோப்பையில் வாய்ப்பு கிடைக்கலாம்.