இந்தியாவின் நட்சத்திர கிரிக்கெட் வீரர் எம்எஸ் தோனி கடந்த 2020 சுதந்திர தினத்தில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்தார்.
MS Dhoni | Brad Hogg (Source : Twitter) |
3 விதமான உலக கோப்பைகள் உட்பட அவர் ஆற்றிய பங்கு மிகவும் அளப்பரியதாகும்.
சென்னை சூப்பர் கிங்ஸ் :
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற போதிலும் தொடர்ந்து ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக கேப்டனாக அவர் விளையாடி வருகிறார், 2008 ஐபிஎல் தொடங்கியது முதல் அந்த அணியின் கேப்டனாக இருந்து வரும் அவர் இதுவரை 3 முறை சாம்பியன் பட்டம் வென்று காட்டியுள்ளார்.
இருந்த போதிலும் கடந்த 2019க்கு பின் அவரின் பேட்டிங் பார்ம் மிக மிக மோசமாக இருந்து வருகிறது, குறிப்பாக கடந்த 2 வருடங்களில் அவர் இன்னும் ஒரு அரை சதம் கூட அடிக்கவில்லை. இது சென்னையின் வெற்றியிலும் எதிரொலிக்க கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் முறையாக வரலாற்றிலேயே பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறாமல் வெளியேறியது.
2022இல் விளையாடுவாரா :
தோனி இல்லாத சென்னை அணியை பல ரசிகர்கள் நினைத்துக் கூட பார்க்க மாட்டார்கள். அந்த வேளையில் தற்போது 40 வயதை நெருங்கும் அவர் அடுத்த வருடம் ஐபிஎல் தொடரில் விளையாடுவாரா என்ற சந்தேகம் ரசிகர்களிடையே இருந்து வருகிறது.
MS Dhoni (Photo By BCCI/IPL) |
இந்த நிலையில் 2021 தான் தோனியின் கடைசி ஐபிஎல் தொடராக இருக்கும் என ஆஸ்திரேலியாவின் முன்னாள் வீரர் பிராட் ஹோக் தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் தனது யூடியூப் வீடியோவில்,
"அவர் இந்த வருடத்துடன் ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வு பெறுவார் என நினைக்கிறேன், குறிப்பாக வருண் சக்கரவர்த்திக்கு எதிராக அவர் அவுட்டான விதம் மிகவும் தவறானது, அந்த தருணத்தில் அவரின் பேட்டுக்கும் காலுக்கும் மிகப்பெரிய இடைவெளி இருந்தது, அனேகமாக 40 எனும் எனும் வயது அவருக்குள் தனது வேலையைத் துவங்கி விட்டது என நினைக்கிறேன், அவரின் விக்கெட் கீப்பிங் சிறப்பாக உள்ளது"
அவர் இன்னும் கேப்டனாக செயல்படுவது சென்னை மற்றும் இந்திய அணிகளுக்கு முக்கியமானதாகும், அவர் மிகவும் நிதானமாக இருந்து ஜடேஜா மட்டுமல்லாது பல இளம் வீரர்களை வளர உதவுகிறார். அவர் நடந்துவரும் விதம், அவரின் பாடி லாங்குவேஜ், அவரின் பார்வையில் இருக்கும் தொய்வு போன்றவை "நான் கூர்மையை இழந்துவிட்டேன் என தெளிவாக காட்டுகிறது"
என கூறினார். 2019க்கு பின் பேட்டிங்கில் தோனி சொதப்பி வந்தாலும் 2020 க்குப்பின் இந்த வருட ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்காக அவர் சிறப்பாக கேப்டன்ஷிப் செய்து வருகிறார்.
- இந்த தொடரில் அவர் தலைமையில் சென்னை இதுவரை பங்கேற்ற 10 போட்டிகளில் 8 வெற்றிகளை பெற்று ஏறத்தாள பிளே ஆப் சுற்று வாய்ப்பை உறுதி செய்துவிட்டது.
பயிற்சியாளராக வாய்ப்பு:
Ravi Shastri | MS Dhoni | Virat Kohli (Photo : Getty Images) |
ஒருவேளை இந்த வருடம் அவரின் கடைசி ஐபிஎல் தொடராக இருந்தாலும் கூட வருகின்ற டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியின் ஆலோசகராக தோனி நியமிக்கப்பட்டுள்ளது அவரின் ரசிகர்களுக்கு சற்று ஆறுதல் அளித்து உள்ளது. அது பற்றி,
"40 வயதில் இந்திய டி20 உலகக்கோப்பை அணியில் ஆலோசகராக வாய்ப்பு கிடைத்துள்ளது அவர் இனிவரும் காலங்களில் இந்திய அணியின் நிர்வாகத்தில் ஏதேனும் ஒரு பொறுப்பிலோ அல்லது சென்னை அணியின் தலைமை பயிற்சியாளராக கூட வாய்ப்புகளை உருவாக்கும் என நினைக்கிறேன்"
என தெரிவித்த பிராட் ஹோக் வருங்காலங்களில் இந்திய அல்லது சென்னை அணிகளுக்கான தலைமை பயிற்சியாளராக எம்எஸ் தோனி நியமிக்கப்பட அதிக வாய்ப்புகள் உள்ளதாகவும் கூறினார்.