AusW vs IndW : வரலாற்றின் முதல் பிங்க் டெஸ்டில் வெல்லுமா இந்தியா

ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய மகளிர் கிரிக்கெட் அணி அங்கு அந்த அணிக்கு எதிராக 3 வகையான கிரிக்கெட் தொடர்களிலும் பங்கேற்று வருகிறது.

Indian Women's Team (Photo : Getty)


இதில் கடந்த சில தினங்களுக்கு முன் நடைபெற்று முடிந்த 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் கடைசி போட்டியில் கடைசி வரை போராடிய இந்தியா 2 விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது. 

முடிவுக்கு வந்த உலகசாதனை:

Photo By ICC

  • 2 - 1 என்ற கணக்கில் ஆஸ்திரேலியாவிடம் தொடரை இந்தியா இழந்த போதிலும் கடந்த 2017 முதல் மகளிர் கிரிக்கெட்டில் தொடர்ந்து 26 ஒருநாள் போட்டிகளில் வெற்றி பெற்று வந்த ஆஸ்திரேலியாவின் உலக சாதனைக்கு இந்தியா முற்றுப்புள்ளி வைத்து சரித்திரம் படைத்தது.

பிங்க் டெஸ்ட் :

இதை அடுத்து இந்த 2 அணிகள் மோத இருக்கும் ஒரு டெஸ்ட் போட்டி செப்டம்பர் 30ஆம் தேதி துவங்க உள்ளது, இந்த டெஸ்ட் போட்டி பகலிரவு போட்டியாக இளஞ்சிவப்பு நிற பந்தில் நடைபெற உள்ளது சிறப்பம்சமாகும்.

இதன் வாயிலாக டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறையாக இந்திய மகளிர் கிரிக்கெட் அணி ஒரு இளஞ்சிவப்பு பகல்-இரவு டெஸ்ட் போட்டியில் களமிறங்க உள்ளது, ஆஸ்திரேலியா கடந்த 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆஷஸ் தொடரின் போது இங்கிலாந்துக்கு எதிராக ஒரு பகல் இரவு டெஸ்ட் போட்டியில் ஏற்கனவே விளையாடியுள்ளது.

  • அத்துடன் கடந்த 15 வருடங்களுக்கு பின்பு முதல் முறையாக ஆஸ்திரேலியாவை இந்திய மகளிர் அணி ஒரு டெஸ்ட் போட்டியில் சந்திக்கவுள்ளது.

போட்டி விவரம் :

செப்டம்பர் 30 - அக்டோபர் 03, ஆஸ்திரேலிய மகளிர் V இந்திய மகளிர், பகல் இரவு டெஸ்ட்.

காலை 10.00 மணி, இந்திய நேரம், காராரா ஓவல், குயின்ஸ்லாந்து.

நேரடி ஒளிபரப்பு :

வரலாற்று சிறப்புமிக்க இந்த போட்டியை இந்தியாவில் இருக்கும் ரசிகர்கள் சோனி டென் நெட்வொர்க் தொலைக்காட்சி மற்றும் சோனி லிவ் மொபைல் அப் வாயிலாக நேரடியாக கண்டு களிக்கலாம்.

முன்னோட்டம் :

ஆஸ்திரேலியா:

சொந்த மண்ணில் மெக் லென்னிங் தலைமையிலான வலுவான ஆஸ்திரேலிய மகளிர் அணி ஒருநாள் தொடரை போல இப்போட்டியிலும் வெல்வதற்கு அதிகமாகவே வாய்ப்புள்ளது.

இருப்பினும் அந்த அணியின் துணை கேப்டன் ரேச்சல் ஹய்ன்ஸ் காயமடைந்து உள்ளது அந்த அணிக்கு சற்று பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியா:

இந்திய அணியிலும் நம்பிக்கை நட்சத்திர வீராங்கனை ஹர்மன்பிரீட் கவூர் காயமடைந்துள்ளார், அவர் இந்த போட்டியில் விளையாடுவாரா என்பது சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

இதற்கு முன் இளஞ்சிவப்பு நிற பந்தில் பகலிரவு டெஸ்ட் போட்டியில் இந்திய மகளிர் அணி விளையாடிய அனுபவம் கிடையாது.

எனவே வரலாற்றின் பிங்க் டெஸ்ட் போட்டியில் அதுவும் வலுவான ஆஸ்திரேலியாவை அவர்களது சொந்த மண்ணில் எதிர்கொள்ள உள்ளதால் மித்தாலி ராஜ் தலைமையிலான இந்திய வீராங்கனைகள் இப்போட்டியில் வென்று சரித்திரம் படைக்க போராட உள்ளார்கள்.

உத்தேச அணிகள் :

ஆஸ்திரேலியா :

பெத் மூனி, அலிஸ்ஸா ஹீலி (கீப்பர்), மெக் லென்னிங் (கேப்டன்), எல்லிஸ் பெர்ரி, அஷ்லே கார்ட்னர், தஹ்லியா மெக்ராத், நிக்கோலா கேரி, சோபி மொலினீஸ், ஜார்ஜியா வாரெஹம், ஹன்னா டார்லிங்டன், டார்சி பிரவுன்

இந்தியா :

ஸ்ம்ரிதி மந்தனா, ஷபாலி வர்மா, பூனம் ரௌட்,  மித்தாலி ராஜ் (கேப்டன்), தீப்தி சர்மா, ஸ்னே ராணா, தானியா பாட்டியா/ரிச்சா கோஸ் (கீப்பர்), ஜூலன் கோஸ்வாமி, பூஜா வஸ்திரக்கர், ஷிகா பாண்டே. 

Previous Post Next Post

Your Reaction